இங்கிலாந்தை டிரெஸ்சிங் ரூமில் வைத்து பூட்டினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு வெற்றி பெறும்! முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் பேட்டி!!

0
56
#image_title

இங்கிலாந்தை டிரெஸ்சிங் ரூமில் வைத்து பூட்டினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு வெற்றி பெறும்! முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் பேட்டி!!

பாகிஸ்தான் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இங்கிலாந்து அணி முழுவதையும் டிரெஸ்சிங் ரூமில் வைத்து பூட்டினால் மட்டுமே நடக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகள் பெற்று 5வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இரண்டே வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் மூன்றாவது ஒரு வழிமுறையை கூறியுள்ளார்.

அதாவது பாகிஸ்தான் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 400 ரன்கள் அடிக்க வேண்டும். அவ்வாறு 400 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணியை 112 ரன்களுக்கு ஆல்அவுட் செய்ய வேண்டும். அதுவும் இல்லை என்றால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 500 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணியை 215 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்ய வேண்டும். மொத்தமாக ரன்கள் கணக்கில் பார்த்தால் பாகிஸ்தான் அணி 287க்கும் அதிகமார ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது முக்கியம்.

அதே போல பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசினால் இங்கிலாந்து அணி நிர்ணயம் செய்யும் இலக்கை பாகிஸ்தான் அணி வெறும் 2.4 ஓவர்களில் எடுக்க வேண்டும். அதாவது வெறும் 16 பந்துகளில் இலக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுத்தால்தான் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியும். இதற்கு மத்தியில் பாகிஸ்தான் அணிக்கு மூன்றாவது வழிமுறை ஒன்றை முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அவர்கள் கூறியுள்ளார்.

இது குறித்து வாசிம் அக்ரம் அவர்கள் “பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கின்றது. அது என்ன என்றால் இங்கிலாந்து அணியை டிரெஸ்சிங் ரூமில் பூட்ட வேண்டும். பின்னர் ‘டைம் அவுட்’ முறையில் ஆல் அவுட் ஆக்கிவிட்டால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்” என்று கிண்டலாக கூறியுள்ளார்.