அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவு!

0
57

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராக பணியாற்றிய அனந்த கிருஷ்ணன் , 93 வயதுடைய இவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

 

இவர் கான்பூரில் உள்ள ஐஐடியில் தலைவராக பதவி வகித்தவர்.

 

பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்யும்படி இருந்த செயல்பட்ட குழுவில் இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.

 

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கலந்தாய்வுக்கு ஒற்றை சாளர முறையில் எளிமையாக கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை வழிமுறை படுத்திய பெருமை இவரைச் சேரும்.

 

எந்தவித கட்டமைப்பு மில்லாமல் செயல்பட்ட 44 நிகர்நிலை பல்கலைக் கழகங்களை உரிமையை ரத்து செய்யக்கோரி பரிந்துரைத்த குழுவில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறையின் புதிய பாடத் திட்டத்திற்கு தயாரித்த இவரின் பணி மிகவும் பாராட்டத்தக்கதாகும் இருந்தது.

 

கணினி இணையத்தில் தமிழ் மொழியை எளிமை ஆக்குவதற்கு ஒருங்கிணைந்த தமிழ் மொழியை உருவாக்க உறுதுணையாக இருந்தவர் இவர்.

 

அரசியல் பின்புலம் மிகுந்தவர்கள் துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டும் என சூழ்நிலைகள் இருந்தபோதிலும் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் விண்ணப்பம் பெற்று தகுதியானவரை துணை வேந்தராக நியமித்த பெருமை அவரைச் சேரும்.

author avatar
Kowsalya