நீங்கள் ரேஷன் அரிசி சாதம் உண்பவரா? அப்போ இதை தெரிந்து கொள்வது அவசியம்!!

0
225
#image_title

நீங்கள் ரேஷன் அரிசி சாதம் உண்பவரா? அப்போ இதை தெரிந்து கொள்வது அவசியம்!!

தென்னிந்தியர்கள் தினசரி உணவில் அரிசி சாதம் உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.அரிசியில் பொன்னி,சம்பா என்று பல வகைகள் இருக்கிறது.ஒவ்வொன்றும் அதன் தரத்திற்குகேற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.சமீப காலமாக நாட்டில் அரிசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அரிசியின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது.

இதனால் ஏழை,எளிய மக்களுக்கு அதை வாங்கி உண்ணும் அளவிற்கு பணம் இல்லாததால் ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் இலவச புழுங்கல் மற்றும் பச்சரிசியை வாங்கி உண்டு வருகிறார்கள்.பெரும்பாலானோர் ரேஷன் அரிசியில் வாசனை வருகிறது என்பதினால் அதை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர்.ஆனால் நாம் காசு கொடுத்து வாங்கி உண்ணும் அரிசியை விட ரேஷனில் கொடுக்கப்படும் இலவச அரிசியில் அதிகளவு சத்துக்கள் இருக்கிறது என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை.

கடைகளின் விறக்கப்படும் அரிசி வகைகள் அனைத்தும் பாலிஷ் செய்யப்பட்டு விற்கப்படுவதால் அதை சமைத்து உண்ணும் பொழுது நமக்கு ஒரு சத்தும் கிடைக்க போவதில்லை.ஆனால் ரேஷன் அரசி பாலிஷ் செய்யப்படாதவை என்பதினால் அதில் அதிகளவு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

ரேஷன் அரிசி சாதம் உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

*ரேஷன் அரிசியில் சாதம் செய்து சாப்பிட்டால் நெடு நேரம் பசி இருக்காது.கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைவான திருப்த்தி கிடைக்கும்.இதனால் தேவை இல்லாத பொருட்களை உண்பதை தவிர்க்க முடியும்.இதன் மூலம் உடல் பருமன் ஏற்படாமல் இருக்கும்.

*உடலில் செரிமானக் கோளாறால் அவதிப்படுபவர்கள் ரேஷன் அரிசியில் சமைத்து உண்ணத் தொடங்குங்கள்.இதனால் செரிமானம் சரியாகும்.

*ஒல்லியான தேகம் கொண்டிருப்பவர்கள் ரேஷன் அரசி சாதம் சாப்பிடுவதன் மூலம் எடை அதிகரித்து உடல் வலிமையாக இருக்கும்.

*நீரிழிவு நோயால் அவதிப்படும் நபர்கள் ரேஷன் அரிசியில் உணவு செய்து உட்கொள்ளவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

*அதேபோல் இரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்கள் ரேஷன் அரிசியில் உணவு செய்து உட்கொள்ளவதை வழக்கமாக்கி கொண்டால் அந்த பாதிப்பு விரைவில் சரியாகும்.