உங்களுக்கு கால்சியம் குறைபாடு உள்ளதா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!!

0
50

உங்களுக்கு கால்சியம் குறைபாடு உள்ளதா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!!

கால்சியம் குறைபாடு, உடல் சோர்வு, கை கால் வலி, மூட்டு வலி இதுபோன்று எதுவும் இருக்காது அதற்கு இதனை சாப்பிட்டால் போதும்.

குறைந்தது 90 வயது வரையாவது ஆரோக்கியமாக அவர்களது வாழ்நாளை கழித்தார்கள். அதன் பிறகு ஒரு சிலர் 70, 80 வயதுவரை ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் இன்றைய தலைமுறை 50 வயது ஆவதற்கு முன்னரே கை, கால் வலி, மூட்டு வலி, முதுகு எலும்பு வலி, இடுப்பு வலி என பல்வேறு வலிகளில் அவஸ்தைப்படுகிறார்கள்.

இதற்கு காரணம் அவர்களின் உடம்பில் இருக்கும் வைட்டமின்கள் குறைபாடாகும். அதாவது உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை நாம் சாப்பிடும் உணவின் மூலம் சேர்த்துக் கொள்வது.

கால்சியத்தின் அளவு உடலில் சரியாக இருந்தால்தான் அவை ரத்த ஓட்டத்திற்கும், இதயத் துடிப்பிற்க்கும், உடலின் மற்ற பாகங்கள் சரியாக இயங்குவதற்கும் துணைபுரிய முடியும்.

50 வயதிற்கு கீழ் உள்ள ஆண்கள் தினமும் 1,000 மில்லி கிராம் கால்சியமும், அதுவே 50 வயதிற்கு கீழ் உள்ள பெண்கள் 1,200 மில்லி கிராம் கால்சியமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதுவே 50 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் 1,200 மில்லி கிராம் கால்சியமும், 50 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் 1,300 கிராம் கால்சியமும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனவே இதுபோன்ற குறைபாடுகளை தீர்ப்பதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருள்கள்:

முருங்கைக்கீரை

இதில் அதிகப்படியான கால்சியம் மற்றும் இரும்பு சத்து உள்ளது.

நெய்

ராகி மாவு/ கேழ்வரகு மாவு

உப்பு

செய்முறை:

1: முதலில் அடுப்பில் ஒரு இரும்பு பாத்திரத்தை வைத்து அதில் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து பின்பு ஒரு கைப்பிடியின் அளவு முருங்கைக்கீரை இலையை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும் பின்பு அதில் 3 டேபிள் ஸ்பூன் கேழ்வரகு மாவு சேர்த்து அதனையும் நன்றாக வருது சுவைக்காக உப்பு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இதனை நாம் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு நல்ல ஒரு ஆரோக்கியம் கிடைக்கும். இதனை காலை மதியம் இது போன்ற சாப்பிடலாம் ஆனால் இரவு மட்டும் கீரை வகைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

இதுபோன்ற சாப்பிட்டு வந்தால் கால்சியம் குறைபாடு உடல் சோர்வு கை கால் வலி மூட்டு வலி ஞாபகம் மறதி இது போன்ற எந்த பிரச்சனைகளும் வராது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

author avatar
Parthipan K