கை, கால், மூட்டு வலியா? கவலை வேண்டாம்… இந்த கீரை சாப்பிட்டு வந்தாலே போதும்!

0
29
#image_title
கை, கால், மூட்டு வலியா? கவலை வேண்டாம்… இந்த கீரை சாப்பிட்டு வந்தாலே போதும்!

முடக்கத்தான் கீரை ஒரு கொடி வகையாகும். இவை படர்ந்து வளரக்கூடியது. முடக்கத்தான் கொடியின் வேர், இலை, விதை ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டவை.

இக்கீரையில் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் உட்பட எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. இந்தக் கீரையை முடர்குற்றான், முடக்கறுத்தான் என்று பல பெயர்களில் அழைக்கின்றனர்.

உடலில் ஏற்படும் பிரச்சினைகளை முடக்கி அழிப்பதால், இதை (முடக்கு +அறுத்தான்) என்பதை முடக்கறுத்தான்  என்று அழைத்தனர். இந்தக் கீரை வாய்வு பிரச்சனைகளை விரட்டி அடிக்கும் வல்லமை கொண்டது.

சரி வாங்க முடக்கத்தான் கீரை சாப்பிட்டால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் –

கை, கால், மூட்டு வலி

முடக்கற்றான் இலைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கை, கால், மூட்டு வலிகளை குணமாக்கிவிடும்.

வாய்வு பிரச்சினைக்கு

3 நாட்களுக்கு முறை முடக்கற்றான் இலையில் ரசம் வைத்து சாப்பிட்டால், உடலிலுள்ள தேவையற்ற வாய்வு வெளியேறி வாய்வு, வாதம்,மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.

மலச்சிக்கல் பிரச்சினைக்கு

முடக்கற்றான் இலைகள், வெள்ளைப் பூண்டு, மிளகு சேர்த்து கொதிக்க வைத்து, சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால், வயிறு சுத்தமாகும், வயிற்று பூசிகள் அழியும், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

காது வலிக்கு

முடக்கற்றான் இலையை இடித்துப் பிழிந்து எடுத்து, எடுத்த சாற்றினை 2 துளிகள் காதில் விட்டு வர காது வலி, காதில் இருந்து சீழ் வடிவது பிரச்சினை சரியாகும்.

இருமலுக்கு

முடக்கற்றான் இலை மற்றும் வேர் இரண்டையும் குடிநீரில் இட்டு 3 வேளை குடித்து வந்தால்  இருமல் சரியாகும்.

மாதவிலக்கு பிரச்சனைக்கு

சில பெண்களுக்கு மாதம்தோறும் சரியாக மாதவிலக்கு ஏற்படாது. இதனால், அடிவயிற்றில் மிகுந்த வலி ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி, அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு பிரச்சனை சரியாகும்.

author avatar
Gayathri