மிகப்பெரிய பரபரப்பு! பிரச்சாரத்திற்கு சென்ற முக்கிய அரசியல்வாதியின் கார் கண்ணாடி உடைப்பு!

0
75

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். அதிமுக சார்பாக நேற்றைய தினம் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கு முன்னரே எதிர்கட்சியானதிமுக சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு விட்டது.
எப்பொழுதுமே திமுக தேர்தல் அறிக்கை விட்ட பிறகு தான் அதிமுக தேர்தல் அறிக்கை விடும். இது ஒரு அரசியல் வியூகமாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் எதிர்க்கட்சி ஆனது என்ன வரையறையுடன் தேர்தல் அறிக்கை விடுகிறது என்பதை நோட்டம் பார்த்து அதற்கு ஏற்றார்போல அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கையை தயார் செய்து விடும் இதுதான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தந்திரம்.

இப்பொழுது அதே தந்திரத்தை தான் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கையிலெடுத்து இருக்கிறார்.அந்த வகையில், திமுகவின் தேர்தல் அறிக்கையில் வந்து இருக்கும் ஒவ்வொருவருக்கும் எதிர் வாக்குறுதிகளை அதிமுக கொடுத்திருக்கின்றது.இந்த நிலையில், மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தமிழ் நாடு முழுவதிலும் தன்னுடைய தீவிரமான பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றார். அந்த விதத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் கோபிநாத்தை ஆதரிக்கும் விதமாக நேற்றையதினம் பல்வேறு இடங்களில் அவர் பிரச்சாரத்தை தொடங்கினார்.

அந்த வகையில், தன்னுடைய திறந்தவெளி வாகனத்தில் நின்று கொண்டு மக்களிடம் உரையாற்றிய அவர் காந்தி ரோடு என்ற இடத்துக்கு நேற்றையதினம் பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். அதன் பிறகு கமல்ஹாசன் அங்கிருந்து புறப்படும் சமயத்தில் ஒருவர் திடீரென்று அவரை இடைமறித்து இருக்கின்றார். இதனை தொடர்ந்து கமல்ஹாசனின் பாதுகாவலர்கள் அவரை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள்.முதலில் அவர் அந்த இடத்திலிருந்து செல்வதைப்போல சென்று விட்டு அதன் பிறகு கமல்ஹாசனின் வாகனம் மீது ஏறி அவர் உட்கார்ந்திருந்த காரின் முன்புற கண்ணாடியை உடைத்து இருக்கின்றார். கார்கண்ணாடி சேதமடைந்தது. இதன் காரணமாக அங்கு மிகப்பெரிய பரபரப்பு உண்டானது.

இதனை பார்த்து அதிர்ச்சிக்குள்ளான அவருடைய பாதுகாவலர்கள் மறுபடியும் அந்த நபரை காரில் இருந்து கீழே இறக்கி இருக்கிறார்கள் உடனடியாக அந்த இடத்திலிருந்து கமல்ஹாசன் தன்னுடைய சொகுசு விடுதிக்கு புறப்பட்டுச் சென்றார். இதனை கண்ட அங்கே இருந்த மக்கள் நீதி மையம் கட்சியின் தொண்டர்கள் அந்த நபரை பிடித்து அடித்து உதைத்து இருக்கிறார்கள். இதனால் அவருக்கு உடம்பில் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வரத்தொடங்கியது. அதன்பிறகு அந்த பகுதியில் இருந்த காவல்துறையினர் அந்த நபரை அவர்களிடம் இருந்து மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். அந்த விசாரணையின் அடிப்படையில் அந்த நபர் யார் எதற்காக இந்த தாக்குதலை நிகழ்த்தினார் போன்ற கேள்விகளுக்கு விடை தெரியும் என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.