சொந்தக் கட்சியினராலேயே சூறையாடப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம்! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

0
66

தேர்தல் நடைபெற இருப்பதால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் வேட்பாளர்பட்டியல் போன்றவற்றை வெளியிட்டு பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், ஆளும் கட்சியான அதிமுகவும் தமிழகம் முழுவதிலும் அந்த கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளராக கடலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமபழனிச்சாமி அறிவிக்கப்பட்டு இருந்தார்.

இன்றைய நிலையில் இன்றைய தினம் அவர் வேட்புமனு தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால் நேற்று இரவு எதிர்பாராதவிதமாக திடீரென்று அதிமுகவின் குறிஞ்சிப்பாடி சட்டசபைத் தொகுதியில் வேட்பாளர் மாற்றப்பட்டார். பரங்கிப்பேட்டை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயத்தின் குறிஞ்சிப்பாடி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை நேற்று மாலை அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டு இருக்கிறது.

இன்றுவரை எப்படியாவது சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராக ஆகி விடலாம் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த பழனிச்சாமி இந்த வேட்பாளர் மாறுதல் அறிவிப்பால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து இருக்கிறார். இதன் காரணமாக, குறிஞ்சிப்பாடி சட்டசபைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மாற்றப்படுகிறார் என்ற அறிவிப்பு வெளியானவுடன் ராம. பழனிசாமியின் ஆதரவாளர்கள் பாதிரிக்குப்பத்தில் இருக்கின்ற அதிமுகவின் அலுவலகத்துக்கு விரைந்து வந்து இருக்கிறார்கள். அந்த பகுதியில் இருந்த கார்கள் மற்றும் அலுவலகங்கள் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். அதன்பிறகு திருவந்திபுரம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள் அதோடு ஒரு சிலர் திடீரென்று கட்சியின் அலுவலகத்திற்குள் சென்று கட்டை மற்றும் கற்களால் ஜன்னல் கண்ணாடிகளை நாசப்படுத்தி இருக்கிறார்கள்.

அதன் பிறகு அமைச்சர் எம் சி சம்பத் அவர்களின் அறைக்கு சென்று இருக்கிறார்கள். ஆனால் அமைச்சர் சம்பத் அங்கே இல்லாத காரணத்தால், அவருடைய இருக்கையை சேதப்படுத்தி விட்டு சென்று விட்டார்கள்.அதனைத் தொடர்ந்து அமைச்சருடைய பிரச்சார வாகனத்தையும் ராம பழனிசாமியின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தி இருக்கிறார்கள். அந்த சமயத்தில் அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் அமைச்சர் சம்பத்தின் மகன் பிராவின் தலைமையிலான அதிமுக ஆலோசனை கூட்டம் நடந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து அதிமுகவைச் சேர்ந்தவர்கள் அமைச்சரின் மகனை பத்திரமாக மீட்டு மேல் தளத்தின் அறைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த தாக்குதலில் அவருடைய ஆதரவாளர்கள் இரண்டு பேருக்கு காயம் உண்டாகி இருக்கிறது. அவர்கள் இருவரையும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.தகவல் தெரிந்தவுடனே கடலூர் துணை காவல்துறை கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான காவல்துறையினர் அங்கே வந்து தகராறு செய்து கட்சி அலுவலகத்தை சேதப்படுத்திய ராம பழனிச்சாமியின் ஆதரவாளர்களை கைது செய்திருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதிலுமே அதிமுக சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட நாள் முதல் ஆங்காங்கே வேட்பாளர்களை மாற்ற கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் வேட்பாளராக ராம பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் திடீரென்று மாற்றப்பட்டது எதற்காக என்று தெரியவில்லை அதனால் அவருடைய ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து இவ்வாறு ஒரு செயலை செய்திருக்கிறார்கள். இதன் காரணமாக அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்து இருப்பதாக சொல்கிறார்கள்.