இந்த 9 நாட்களில் வங்கிகள் செயல்படாது! – RBI

0
70

இந்திய ரிசர்வ் வங்கி, இந்த மாத தொடக்கத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலின் படி, இந்த மாதம் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவித்தது.

 

ஆன்லைன் வங்கி சேவைகள் மற்றும் தானியங்கி டெல்லர் இயந்திரம் ATM வசதிகள் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், வாடிக்கையாளர்கள் விடுமுறை நாட்களில் வங்கி கிளைகளில் பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் செய்வது போன்ற வழக்கமான வங்கிச் சேவைகளைப் பெற முடியாது. 15 நாட்களில் 6 நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் 9 நாட்கள் விடுமுறை உள்ளது. வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ.

 

ஆகஸ்ட் 16, 2021 (திங்கள்): பார்ஸ் புத்தாண்டு (ஷஹென்ஷாஹி) – காலண்டரின் முதல் மாதத்தின் முதல் நாளாகக் கொண்டாடப்படும். ஈரானிய மற்றும் பாரசீக புத்தாண்டு காரணமாக வங்கிகள் திங்களன்று பெலாப்பூர், மும்பை மற்றும் நாக்பூரில் மூடப்படும்.

 

ஆகஸ்ட் 19, 2021 (வியாழக்கிழமை): முஹர்ரம் (அஷூரா) – ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா, ராய்பூர், வங்கிகள் மூடப்படும். ராஞ்சி மற்றும் ஸ்ரீநகர்,அகர்தலா, அகமதாபாத், பெலாப்பூர், போபால், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.

 

ஆகஸ்ட் 20, 2021 (வெள்ளிக்கிழமை): முஹர்ரம்/ முதல் ஓணம் – கேரளா, கர்நாடகா, மற்றும் தமிழ்நாட்டில் முதல் ஓணத்தின் காரணமாக வங்கிகள் மூடப்படும்.

 

ஆகஸ்ட் 21, 2021 (சனிக்கிழமை): திருவோணம் – திருவோணத்தையொட்டி, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

 

ஆகஸ்ட் 22, 2021 (ஞாயிற்றுக்கிழமை): நாடு முழுவதும் வங்கிகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருக்கும். இருப்பினும், அதே நாளில் ரக்ஷா பந்தன் பண்டிகையும் வருகிறது.

 

ஆகஸ்ட் 23, 2021 (திங்கள்): ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி – திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள வங்கிகள் ஆகஸ்ட் 23 அன்று மூடப்படும்.

 

ஆகஸ்ட் 28, 2021 (சனிக்கிழமை): இந்தியா முழுவதும் வங்கிகள் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்.

 

ஆகஸ்ட் 29, 2021 (ஞாயிறு): ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படும்.

 

ஆகஸ்ட் 31, 2021 (திங்கள்): ஜன்மாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) அன்று, குஜராத், தமிழ்நாடு, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

 

 

author avatar
Kowsalya