விமான பயணிகள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உரிமைகள்!!

0
72

விமான பயணிகள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உரிமைகள்!!

பலருக்கும் தெரியாத ஒரு பயன்படும் தகவலை இங்கு பார்ப்போம். நாட்டில் பல போக்குவரத்துகள் காணப்படுகிறது. அதில் ஒன்றுதான் விமான போக்குவரத்து. விமானத்தில் பயணிப்பதற்கு முதலாவதாக நாம் டிக்கெட் முன்பதிவு செய்து விடுகிறோம்.

அவ்வாறு நாம் முன் பதிவு செய்யப்பட்ட விமானம் 2 மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம் வரை தாமதமாக வந்தால் பயணிகளுக்கு உணவு ஏற்பாடு செய்து தர வேண்டும். அல்லது விமானம் 6 மணி நேரம் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு வேறு ஒரு விமானத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும் மேலும் அவர்களின் டிக்கெட் தொகையை திரும்ப அவர்களிடமே அளிக்க வேண்டும்.

அதுவே விமானம் 24 மணி நேரத்திற்கு பிறகு வரும் என்றால் பயணிகள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும். ஒருவேளை இயற்கை சீற்றங்களால் அதாவது புயல் மழை போன்றவற்றால் விமானம் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இது போன்ற வசதிகள் எதுவுமே செய்து தர மாட்டார்கள்.

விமானம் தாமதம் ஆகிவிட்டால் வேறு விமானத்தை ஏற்பாடு செய்து தருவார்கள் அதுவும் ஒன் 2 ஒன் என்ற முறையில் இல்லாமல் இடையில் ஒரு பிளைட் மாறக்கூடிய வகையில் ஏற்பாடு செய்து தருவார்கள்.

உதாரணத்திற்கு நாம் மதுரையில் இருந்து டெல்லிக்கு விமானம் முன்பதிவு செய்து இருக்கிறோம் என்றால் அதற்கு மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு விமானம் மற்றும் சென்னையில் இருந்து டெல்லிக்கு ஒரு விமானம் என்று ஏற்பாடு செய்து தருவார்கள்.

இவ்வாறு நாம் செல்லும்போது சென்னையில் இருந்து போகக்கூடிய விமானத்தால் நமக்கு தாமதம் ஆகிவிட்டால் அதற்கேற்றபடி நமக்கு தொகையை திரும்பி வழங்குவார்கள். இதற்கு பெயர்தான் கனெக்டிங் பிளைட். இதன் பயண நேரத்தை பொறுத்து நமக்கு கம்பன்சேஷன் தொகையை வழங்குவார்கள்.

இந்த கனெக்டிங் பிளைட்டின் பயண நேரம் ஒரு மணி நேரத்திற்குள் இருந்தால் கம்பன்சேஷன் தொகை 5000 எனவும் இரண்டு மணி நேரம் இருந்தால் 7000 எனவும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இருந்தால் பத்தாயிரம் எனவும் வழங்குவார்கள்.

சில சமயங்களில் இந்த காம்பன்சேஷன் நாம் தொகையை வழங்காமல் நாம் டிக்கெட் முன்பதிவு செய்த முழு தொகையையுமே வழங்கி விடுவார்கள். இப்போது நாம் செல்லக்கூடிய விமானம் ஆனது ஏதேனும் ஒரு பிரச்சனையால் வேறு ஒரு விமான நிலையத்தில் இறங்கிவிட்டால்,

நமக்கு வேறு விமானத்தை ஏற்பாடு செய்வதோடு நமக்கு தேவையான வசதிகளையும் செய்து தருவார்கள்.இதுபோல விமான பயணிகளின் வசதிக்காக நிறைய சட்டங்கள் நடைமுறையில் உள்ளது.

author avatar
CineDesk