மேகதாது அணை விவகாரம்! தமிழக பாஜகவின் நிலை குறித்து அண்ணாமலை நச் பதில்!

0
60

தமிழக பாஜகவின் துணைத் தலைவராக இருந்த முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமனம் செய்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா சமீபத்தில் உத்தரவிட்டார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் மாவட்ட ரீதியாக அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், சென்னையில் இருக்கின்ற தியாகராயநகர் இது பிடித்துக் கொண்டிருப்பது பகுதியில் இருக்கும் கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலை தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.

இந்த சூழ்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, இல கணேசன், பாஜகவின் சட்டசபை கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மூத்த தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன் உட்பட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

இதையடுத்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய அண்ணாமலையிடம் மேகதாது அணை விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பட்ட சமயத்தில், இந்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை மேகதாது அணையை கட்ட கூடாது என்பது தான் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்று தெரிவித்திருக்கிறார். அதோடு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.