மேகதாது அணை குறித்து கேபி முனுசாமி தெரிவித்த பரபரப்பு கருத்து!

0
80

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் மிகத் தீவிரமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது காவிரியாறு அந்த ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் நெல் உற்பத்தி குறையும். மேகதாது ஆணையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பை தமிழக அரசு கர்நாடக அரசிற்கு தொடர்ச்சியாக எடுத்து தெரிவித்தும் தன்னுடைய நிலையில் அந்த மாநில அரசு மிக உறுதியாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் நேற்றைய தினம் டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். அதோடு மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்றும் எடுத்து எடுத்துரைத்து இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி மேகதாது அணை விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது ஒரு மாநிலத்தின் திட்டத்தால் இன்னொரு மாநிலத்திற்கு பிரச்சினை ஏற்படுமானால் அதனை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை. நீதிமன்றத்திற்கு இணையாக இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.