விண்வெளியில் விவசாயம் பார்க்கும் சீனா!!! அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யாவுக்கு அடுத்து சாதனை படைத்த சீன வீரர்கள்!!!

0
80
#image_title

விண்வெளியில் விவசாயம் பார்க்கும் சீனா!!! அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யாவுக்கு அடுத்து சாதனை படைத்த சீன வீரர்கள்!!!

விண்வெளியில் சீனா நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தக்காளி, கீரை போன்றவற்றை விளைவித்து சாதனை படைத்துள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பானை தொடர்ந்து சீனா விண்வெளி விவசாய முறையை நிகழ்த்தி காட்டியிருக்கின்றது.

விண்வெளியில் அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஐரோப்பா, ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து ஆராய்ச்சி மையத்தை அமைத்து விண்வெளி ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அதைப் போலவே சீனா தனக்கென தனியாக ஒரு விண்வெளி ஆராய்ச்சி மையத்தை விண்வெளியில் அமைத்துள்ளது.

இதையடுத்து சீனா விண்வெளியில் டியாகாங் என்ற விண்வெளி ஆராய்ச்சி மையத்தை தொடங்கிய விண்வெளி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதையடுத்து விண்வெளி ஆராய்ச்சி பணிகளை மேற்கெள்வதற்காக சீன விண்வெளி வீரர்கள் சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தங்கியுள்ளனர்.

கடந்த மே மாதம் 30ம் தேதி விண்வெளி வீரர்களான ஜூ யாங்க்சு, ஜிங்ஹைபெங் ஆகியோரும் சீனா ஏரோனாட்டிக்ஸ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் குய் ஹைச்சாலோ அவர்களும் என்று மூன்று பேரும் ஷென்சோ 16 என்ற விண்கலம் மூலமாக சீனா விண்வெளி ஆராய்ச்சி மையமான டியாகாங் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்றனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சென்றவர்கள் அங்கு தக்காளி, செர்ரி, கீரை, சின்ன வெங்காயம் ஆகிய செடிகளை வளர்த்தனர்.

பூமியில் சாதாரணமாக செடிகள் வளர்வதற்கு தேவையான வெப்பநிலை, நீர், காற்று ஆகியவை இருக்கின்றது. இதன் காரணமாக செடிகள் பூமியில் எளிதாக வளரும். ஆனால் விண்வெளியில் இதற்கு நேர் எதிராகத்தான் இருக்கும்.

இதையடுத்து சீனா சில சிறப்பு ஏற்பாடுகளை செய்தது. மேலும் செடிகளை பயிரிடுவதற்கான சில சிறப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தது. அதன் மூலமாக செடிகளுக்கு தகுந்த வகையில் கார்பன்டை ஆக்சைடு, வெப்ப நிலை, ஆக்சிஜன், ஈரப்பதம் உள்ளிட்டவை கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

சீன விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விண்வெளி வீரர்கள் பயிரிட்ட தக்காளி, கீரை, செர்ரி, சின்ன வெங்காயம் ஆகிய நான்கும் நன்கு வளர்ந்துள்ளது. மேலும் நன்கு வளர்ந்த இந்த செடிகளை விண்வெளி வீரர்கள் அறுவடை செய்துள்ளனர். இதையடுத்து மே மாதம் சென்ற விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி பணிகளை முடித்துவிட்டு நவம்பர் மாதம் பூமிக்கு வரவுள்ளனர்.

விண்வெளியில் செடிகளை அறுவடை செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா ஆகிய நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பயிரிட்டு விளைவித்து அறுவடை செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.