ரேசன் கடை ஊழியர்களுக்கு பரந்த உத்தரவு!! இனி குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற வாய்ப்பில்லை!!

0
98
#image_title

ரேசன் கடை ஊழியர்களுக்கு பரந்த உத்தரவு!! இனி குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற வாய்ப்பில்லை!!

நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று பொது விநியோகத்திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பல கோடி இந்தியர்கள் பயனடைந்து வருகின்றனர்.

மொத்தம் 6 வகை குறியீடு கொண்ட ரேசன் அட்டைகளில் PHH, PHH – AAY, NPHH குறியீடு கொண்ட குடும்ப அட்டைகள் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி வாய்ந்தவை ஆகும். இதில் முன்னுரிமை பெற்ற PHH – AAY குறியீடு கொண்ட அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் புழுங்கல் அரிசி 35 கிலோ, பச்சரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தாக PHH, NPHH குறியீடு கொண்ட அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 6 கிலோ என்ற அடிப்படையில் புழுங்கல் அரிசி, பச்சரிசி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்டுகிறது.

மேலும் 30 ரூபாய்க்கு 1 கிலோ துவரம் பருப்பு, 25 ரூபாய்க்கு 1 லிட்டர் பாமாயில், 13 ரூபாய்க்கு, 1 கிலோ சர்க்கரை விநியோகம் செய்யப்படுகிறது. ரேசனில் கொடுக்கப்படும் பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் இருப்பதினால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சில ரேசன் கடைகளில் உரிய எடையில் பொருட்களை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுவது தொடர்கதையாகி வருகிறது.

உதாரணத்திற்கு 1 கிலோ துவரம் பருப்பு வழங்குவதற்கு பதில் 50 , 100 கிராமை குறித்து தான் ரேசன் ஊழியர்கள் வழங்குகின்றனர் என்று குடும்ப அட்டைதாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல் சர்க்கரை, அரசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களையும் உரிய எடைக்கு வழங்காமல் குறைத்து வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதை பொதுமக்கள் தட்டி கேட்டால் ரேசன் ஊழியர்கள் உங்களுக்கு பொருட்கள் இல்லை என்று தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் முன் வைத்து வரும் நிலையில் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது.

அதாவது ஊழியர்கள் ரேசன் கடையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கக் கூடிய பொருட்கள் தரமானதாகவும், சரியான எடையிலும் வழங்க வேண்டும். ரேசன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் ஊழியர்கள் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது என்றும் ரேசன் ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவால் குடும்ப அட்டைத்தார்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.