உருவாகிறது “மிதிலி” புயல்!! தமிழகத்தில் தொடர்ந்து 6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு!!

0
75
#image_title

உருவாகிறது “மிதிலி” புயல்!! தமிழகத்தில் தொடர்ந்து 6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு!!

தமிழகத்தின் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் நேற்று முன்தின மாலை நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 390 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கே நிலை கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து வரும் நிலையில் அவை இன்றுக்குள் புயலாக உருவெடுக்கும். புதிதாக உருவாக இருக்கும் இந்த புயலுக்கு “மிதிலி” என பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில் புயல் நாளை வடக்கு ஒரிசா – மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் கரையைக் கடக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்க காத்துக் கொண்டிருக்கிறது. சென்னை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், நாகை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.