தினமும் தேன் மற்றும் லவங்கப்பட்டை சாப்பிடலாமா!!? தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும்!!?

0
36
#image_title

தினமும் தேன் மற்றும் லவங்கப்பட்டை சாப்பிடலாமா!!? தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும்!!?

நாம் தினமும் தேன் மற்றும் லவங்கப்பட்டை சாப்பிட்டு வருவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அது என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேனை மட்டும் தனியாக சாப்பிடும் பொழுது நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. பல ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது. தேனில் உடலுக்கு தேவையான 9 வகையான அமினோ அமிலங்கள் இருக்கின்றது. மேலும் தேனில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் அளவில் இருக்கின்றது. மேலும் தேனில் பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், சகாயம் ஆகிய சத்துக்களும் உள்ளது.

அதே போல லவங்கப்பட்டையை தனியாக சாப்பிடும் பொழுது நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்கின்றது. வாசனைக்காக பயன்படுத்தப்படும் லவங்கப்பட்டையில் உடலுக்குத் தேவையான ஒமேகா6 அமிலங்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, நார்ச்சத்துக்கள், புரதச்சத்துக்கள், நீர்ச்சத்துத்கள், மெக்னீசியம், பேட்டியின், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் பல சத்துக்கள் உள்ளது.

தற்பொழுது தேன் மற்றும் லவங்கப்பட்டை இரண்டையும் சேர்த்து சாப்பிடும் பொழுது நமது உடலுக்கு இரண்டு மடங்காக நன்மைகள் கிடைக்கின்றது. அது என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தேன் மற்றும் லவங்கப்பட்டையை சேர்த்து சாப்பிடும் பொழுது கிடைக்கும் நன்மைகள்…

* தேன் மற்றும் லவங்கப்பட்டையில் ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. இதனால் உடலில் ஏற்படும் ஃபிரீ ரேடிக்கல் பிரச்சனையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

* தேன் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது. லவங்கப்பட்டையில் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகின்றது. இதை இரண்டையும் சேர்த்து சாப்பிடும் பொழுது நமது உடலில் ஏற்படும் சர்க்கரை நிலை கட்டுப்படுத்தலாம்.

* லவங்கப்பட்டையில் கெட்ட கொழுப்பை கரைக்கும் திறன் உள்ளது. மேலும் தேனை சாப்பிடும் பொழுது உடலில் ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும் திறன் உள்ளது. இதனால் தேன் மற்றும் லவங்கப்பட்டை இரண்டையும் சேர்த்து சாப்பிடும் பொழுது இதயம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

* தேன் மற்றும் லவங்கப்பட்டையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும், பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. இதனால் தேன் மற்றும் லவங்கப்பட்டையை சேர்த்து சாப்பிடும் பொழுது பாக்டீரியா வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

* தேன் மற்றும் லவங்கப்பட்டையை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் பொழுது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்துகின்றது.

* மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் தேன் மற்றும் லவங்கப்பட்டை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

* வயிற்று வலி உள்ளவர்கள் தேன் மற்றும் லவங்கப்பட்டை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதனால் வயிற்றில் உள்ள புண்கள் குணமாகும். வயிற்று வலி ஏற்படாது.

* உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் தேன் மற்றும் லவங்கப்பட்டை இரண்டையும் சேர்த்து சாப்பிடலாம்.

தினமும் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் லவங்கப்பட்டை பொடி இரண்டையும் கலந்து சாப்பிட்டு வரும் பொழுது மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடுகின்றது.