ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த கத்தார் விருப்பம் தெரிவித்துள்ளது

2032 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த, கத்தார் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் 2032 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த இதற்கு முன்னர் விருப்பம் தெரிவித்துள்ளன. வட-தென் கொரியாக்கள் இணைந்து ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவிக்கலாம் என்ற ஊகமும் நிலவுகிறது.   கத்தார், 2016, 2020 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்தும் போட்டியில் பங்கேற்று, இரண்டு முறையும் அதன் விருப்பம் நிராகரிக்கப்பட்டது. உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்துவதில் தனக்கு நல்ல அனுபவமும் … Read more

பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்ட தோக்கியோ விளையாட்டரங்குகள்

தோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட விளையாட்டரங்குகள் தற்போது பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளன. அந்த அரங்குகளில் வீரர்களும் பயிற்சியைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களை அடுத்த மாத மத்தியில் திறந்துவிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா நோய்ப்பரவல் நிலைமையைப் பொறுத்துத்தான் விளையாட்டு அரங்குகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாதம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தோக்கியோ திட்டமிட்டிருந்தது. கொரோனா கிருமிப்பரவல் காரணமாக அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டிகளுக்காக சுமார் 10 … Read more

நான்காவது நாள் ஆட்டம் மழையால் ரத்து

இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று 4-வது நாள் ஆட்டம் நடக்க இருந்தது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் நேற்றைய ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. வெஸ்ட்இண்டீஸ் அணி தோல்வியை தவிர்க்க 98 ஓவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டும். இன்றைய கடைசி நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அங்கு மழை பெய்ய 50 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு … Read more

உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி ஐ.சி.சி. அறிவிப்பு

2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதியாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும் ஒருநாள் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் தொடங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த போட்டியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.  உலக கோப்பை தகுதிக்கான ஒருநாள் சூப்பர் லீக் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்கும் என்று (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் … Read more

இங்கிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் சவுதம்டனில் முறையே வருகிற 30-ந் தேதி, ஆகஸ்டு 1 மற்றும் 4-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டி தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வரும் கேப்டன் ஜோ ரூட், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ்பட்லர், வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் … Read more

கங்குலியின் செயல்பாட்டை நான் பார்த்து இருக்கிறேன் – சங்கக்கரா

சர்வதேச கிரிக்கெட் கவுன்லின் (ஐ.சி.சி.) தலைவராக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த ஷசாங் மனோகரின் பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்ததால், அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.  இது தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கரா அளித்த பேட்டி ஒன்றில் கூறிய போது ‘ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி பொருத்தமானவராக இருப்பார் என்று நினைக்கிறன் என்றார். மேலும் கிரிக்கெட் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் … Read more

பென் ஸ்டோக்ஸ் எந்த ஒரு கேப்டனுக்கும் கனவு வீரராக இருப்பார் – கவுதம் காம்பிர்

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கவுதம் காம்பிர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ‘ஆல்-ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ் பற்றி பேசியுள்ளார். அதில் இந்தியாவில் தற்போது பென் ஸ்டோக்சுடன் ஒப்பிடக்கூடிய வீரர் இந்திய அணியில் தற்போது யார் இல்லை. ஏனெனில் இவர் தனித்துவமாக திகழ்கிறார். டெஸ்ட், ஒருநாள், ‘டுவென்டி-20’ போட்டிகளில் இவரது செயல்பாட்டை பார்க்கும் போது இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் யாரும் நெருங்க முடியாது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்திலும் அசத்தி வருவதால் இவர் எந்த … Read more

வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அபாரம்

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 369 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 137 ரன்களுடன் பரிதவித்தது. மூன்றாவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வழியாக பாலோ-ஆன் (170 ரன்) ஆபத்தை தவிர்த்தது. கேப்டன் … Read more

இந்த மாதத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும்? மேட்ச்ல நல்ல பர்பாஃர்ம் இல்லனா தோனிக்கு வாய்ப்புகள் கிடைக்காது?

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. இதன்பின்னர் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்திய காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர் நடைபெறவில்லை. மேலும் செப்டம்பரில் போட்டியை இலங்கை மற்றும் சில குறிப்பிட்ட வெளிநாடுகளில் நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகின.   இதையடுத்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து போன்ற நாடுகள் பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்தன. இந்நிலையில் … Read more

ஐ.பி.எல். தொடரின் அட்டவணை வெளியானது உண்மையா?

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக  ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மேலும் இதன் காரணமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம்  இந்தியாவில் அதிகமாக இருப்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 … Read more