நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு:? மேலும் ஐந்து சடலங்கள் மீட்பு?

கடந்த வெள்ளிக்கிழமையன்று கேரளாவில் மூணாரில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 20 குடும்பங்களைச் சார்ந்த 78 பேர் மண்ணில் புதைந்தனர்.கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து மீட்பு பணி நடைபெற்று வருகின்றது.மழையின் காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாக இன்றுவரை மீட்பு பணி நடைபெற்று வருகின்றது.கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை விவரங்கள் வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்ட மீட்புப்பணியில் 12 பேர் காயங்களுடனும்,17 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டனர். சனிக்கிழமையன்று தொடர்ந்து நடத்தப்பட்ட மீட்பு பணியில் மேலும் 10 பேர்களின் உடல் … Read more

வி.பி.துரைசாமி கொடுத்த திடுக்கிடும் தகவலால் அதிர்ந்து போன மு.க.ஸ்டாலின் !

திமுக வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வகித்து வந்தவர் தான் வி.பி துரைசாமி கடந்த சில மாதத்திற்கு முன் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.இவர் இணைந்த பிறகு அதிருப்தியில் உள்ள திமுக வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பாஜகவில் இணைவார்கள் என்று செய்திகள் வெளியானது வி.பி.துரைசாமியும் அவ்வேறே நடக்கும் கூறியிருந்தார்.அவர் கூறியபடி அண்மையில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் டெல்லியில் உள்ள பாஜக தலைவரை சந்தித்து திமுக விற்கு அதிர்ச்சி ஏற்படுத்தினர் இதனால் கு.க … Read more

மூணார் நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை: கடம்பூர் ராஜு விளக்கம்

மூணார் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் உள்ள வாரிசுகளுக்கு அரசு வேலை நியமனம் செய்வதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3.25 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த பெட்டி முடி ராஜ மலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அங்கு தங்கியிருந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை, சட்டமன்ற உறுப்பினரும் செய்தி தொடர்பு மற்றும் விளம்பரம் துறை அமைச்சருமான கடம்பூர் ராஜு அங்கு … Read more

கொரோனா மருத்துவமனையிலிருந்து காணாமல் போன நபர்: சாலையோரம் மயங்கி மரணம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த சேரியந்தல் கிராமத்தை சேர்ந்த ஒருவர் (40 வயதான ஆண்) அப்பகுதியில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 6ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையில் இருந்த அவர் திடீரென காணவில்லை. இதனை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால், அவரை காணவில்லை. இந்நிலையில், … Read more

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்து சமீபத்தில் அதன் தேர்ச்சி மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியானது.பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் தங்களது கல்லூரி படிப்புகளை தொடங்க ஏதுவாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தியது. கடந்த ஆண்டு பொறியியல் படிப்பு மேற்கொள்பவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அவர்கள் சேர விரும்பும் கல்லூரிகளை அந்தந்த மாவட்ட அரசு பொறியியல் கல்லூரிகளில் தேர்ந்தெடுக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.அதேபோன்று அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் நேரடியாக கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பிக்காமல், … Read more

ஒருவாரத்திற்கு கனமழை எச்சரிக்கை:? வரலாறு காணாத மழை!

மும்பையில் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத மழை பெய்து வருகின்றது.கிட்டத்தட்ட 46 ஆண்டுகளுக்கு பிறகு இது போன்ற மழை இப் பகுதியில் கொட்டி வருகின்றது.கனத்த மழை மட்டுமல்லாது பலத்த சூறாவளி காற்று வீசி வருகின்றது.மும்பை மாநகரில் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், அங்கு போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்கு மிகக் கனத்த மழை பெய்யும் என்றும்,இது 46ஆண்டுகளுக்கு … Read more

விஸ்வரூபம் எடுக்கும் மூலப்பத்திர விவகாரம் ! மூலப்பத்திரத்தை எடுத்த தடா.பெரியசாமி !

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பரப்பரப்பை ஏற்படுத்திய முரசொலி மூலப்பத்திர விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.கடந்த ஆண்டு விக்கிரவாண்டி,நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைப்பெற்றது. நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மனோகரனை ஆதரித்து பிரச்சாரத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அசுரன் படத்தை பார்த்துவிட்டு பஞ்சமி நிலம் பற்றி கருத்து ஒன்று தெரிவிக்க அடுத்த நாளே பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக வின் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது என்று டுவிட்டரில் பதிவு செய்தார்.உடனே … Read more

டெல்டா மாவட்ட விவசாயிகள் மாநில அரசுக்கு கோரிக்கை:? விவசாயிகளுக்கு கைக்கொடுக்குமா தமிழக அரசு?

கடந்த 16 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த வருடம் சரியான பருவ நீரும், தண்ணீர் திறப்பு விவசாயிகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.அரசின் ஒத்துழைப்பாலும் தண்ணீ செல்லும் வழித்தடங்கள் தூர்வாரப்பட்டு சரியான நேரத்தில் கடைமடைக்கு செல்ல உதவியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் கூட மூன்று லட்சத்தை ஏக்கரை தாண்டி அதிகமாக ஒரு லட்சம் ஏக்கர் சாகுபடி செய்துள்ளது.கடந்த வருடம் போல் இல்லாமல் எவ்வித புயல் ,வெள்ளம் போன்ற எவ்வித பாதிப்புமின்றி பிரதமர் காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு உதவியது. இத்திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு … Read more

ஒரே படத்தில் அக்கா தங்கையாக நடிக்கவிருக்கும் டாப் ஹீரோயின்ஸ்!!  குஷியான ரசிகர்கள்!! 

கதாநாயகிகளை மையப்படுத்தி  உருவாகவுள்ள கதைக்கு, அக்கா தங்கையாக சமந்தாவும் ராஷ்மிகா மந்தனாவும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா,விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் நயன்தாராவுடன் இணைந்து அவர் நடிக்க இருக்கிறார். அடுத்து அஸ்வின் சரவணன் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.  இதற்கிடையே பிரபல தெலுங்கு இயக்குனர் படத்திற்கும் நடிக்கவிருப்பதாகவும் அதில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சமந்தா  நடிப்பிற்கு அதிக ஸ்கோப் உள்ள கதை என்று கூறப்படுகிறது. … Read more

படிப்படியாக குறைந்து வரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து:?

கர்நாடகாவில் கனமழை செய்து வருவதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரிநீர் விநாடிக்கு 1.50 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி விநாடிக்கு 1.45 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.நேற்று மாலையில் 1.50 லட்சம் கன அடியாக நீர் அதிகரித்து வருகின்றது. கர்நாடக கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து உள்ளதாகவும்,கிருஷ்ண சாகர் … Read more