குமரியில் கடல் சீற்றம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! குமரி மக்களே உஷார்!

குமரியில் கடல் சீற்றம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! குமரி மக்களே உஷார்! கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கடலோரப் பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்கச் சொல்லி வலியுறுத்துகின்றது. தமிழகத்தில் சில நாட்களாகவே நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மிகுந்த மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது பழைய நிலைக்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் பயங்கரமான நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு … Read more

விமான நிலையத்தில் கனிமொழி எம்.பிக்கு என்ன நேர்ந்தது என்று தெரியுமா.!?

திமுக வின் மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி விமான நிலையத்திற்கு வருகைபுரிந்த போது சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி (CISF) சோதனை மற்றும் பாதுகாப்பு குறித்து கனிமொழியிடம் இந்தியில் கேட்டபோது எனக்கு இந்தி தெரியாது தமிழ்,ஆங்கிலம் தான் தெரியும் அதனால் எதுவாக இருப்பினும் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கூறுங்கள் என்று கூறியுள்ளார் அதற்கு அந்த CISF அதிகாரி நீங்கள் இந்தியர் தானா ?என்று கேள்வி எழுப்பி … Read more

வீடியோ கான்பிரன்ஸ் விசாரணையில் அதிக குற்றங்களுக்கு தீர்வு கண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை

கொரோனா ஊரடங்கல் ஏப்ரல் மாதத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் |உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மூடப் பட்டிருக்கின்றது.உயர் நீதிமன்றகளில் ஜூன் மாதம் தொடக்கத்தில் நேரடி விசாரணை தொடங்கப் பட்டது.அப்பொழுது நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ததால் நேரடி விசாரணை ரத்து செய்தது.பின்பு உயர்நீதிமன்றக் கிளையில் வீடியோ கான்பிரன்ஸ் வசதிகள் கொண்ட விசாரணை நடத்த தொடங்கினார்.அதில் கடந்த ஜூலை மாதத்தில் 5520 மனு தாக்கல் செய்யப்பட்டன. இதில் 1433 ரிட் மனு தாக்கல் … Read more

நாளை வெளியாகும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, தொற்றின் காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டடு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.மாணவர்கள் தங்களது உயர்கல்வியை தொடர மதிப்பெண்கள் அடிப்படையாக இருப்பதால் காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப் பதிவேட்டின் சராசரியின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க கோரி தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளி கல்வி துறையால் உத்தரவிடப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி மிகத் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.அண்மையில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் … Read more

மது விற்பனையில் நேற்று ஒரே நாளில் இவ்வளவு வருமானமா ?

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.ஜூலை மாதம் தொர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு , ஜூலை மாதமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு நாளில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்ய இயலாததால் சனிக்கிழமை அன்று மதுவை வாங்கிச் செல்வது வழக்கமாக இருக்கிறது.இந்நிலையில் தமிழ்நாட்டில் சனிக்கிழமை டாஸ்மாக் கடைகளில் மதுவை வாங்க மக்கள் அலை மோதி வருகின்றனர்.சனிக்கிழமை மட்டும் விற்பனை அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில்,நேற்று ஒரே நாளில் … Read more

இந்தப் பகுதிகளுக்கெல்லாம் நாளை மின் தடை அறிவிப்பு?

சென்னை புறநகா்ப் பகுதிகளில் நாளைஆகஸ்ட் 10, காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: அடையாறு சின்னமலைப் பகுதி: ரங்கராஜபுரம், தெற்கு நிழற்சாலை, அண்ணா பல்கலைக்கழகம், வடக்கு மாட தெரு, ஸ்ரீநகா்காலனி. ஈஞ்சம்பாக்கம் பகுதி: வி.ஜி.பி.லேஅவுட் பகுதி-1, ரகுவரன் சாலை, சீனிவாசா நிழற்சாலை,உத்தண்டி கிராமம். வேளச்சேரி கிழக்கு மற்றும் மையப் பகுதி: 100 அடி இணைப்பு சாலை ஒரு பகுதி, தாண்டீஸ்வரம் காலனி, சீதாபதி … Read more

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தடயங்கள் கண்டெடுப்பு!

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தடயங்கள் கண்டெடுப்பு! திருவண்ணாமலை வந்தவாசி அருகே இரண்டாயிரம் ஆண்டுகள் முன் வாழ்ந்த மனிதர்களின் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, கீழ்நமண்டி கிராமத்தின் மலையின் அடிவாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கீழ்நமண்டி என்ற கிராமத்தில் தெற்கு பகுதியில் உள்ள குன்றில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான மனிதர்களை புதைத்த ஈமக்காடு என்றழைக்கப்படும் இடுகாடு இருப்பதை கண்டறிந்தனர். 300க்கும் மேற்பட்ட வட்ட … Read more

மேட்டூர் அணையின் நீர்வரத்து இரட்டிப்பானது

தென்மேற்கு பருவமழை தொடர்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண சாகர் அணையின் நிர்திறப்பு நேற்று 45,000 கடி அடி நீர் வந்திருந்தது. அதிகமாக மழை பெய்து வருவதால் தண்ணீர் திறப்பு இரட்டிப்பாக திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி இன்று ஒகேனக்கல்லில் நீர்வரத்து 45000 கன அடியிலிருந்து 90 ஆயிரம் கனஅடியாக நீர் வரத்து அதிகமாகி உள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர் வரத்து 90 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வருகிறது.இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் … Read more

சித்த மருத்துவத்தால் குணமான 70வயது தந்தை: கொரோனாவிற்கான சித்தா சிகிச்சை பற்றி விளக்கும் மகன்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவருக்கு முக்கால்வாசி நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சித்த மருத்துவத்தின் மூலம் குணம் அடைந்துள்ளார். இவர் அடிப்படையில் நீரிழிவு நோயாளி ஆவார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளைப் பற்றி அவரது மகன் நரேந்திர ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் தொழிலதிபராக இருந்துவருபவர் பிரசாத் ரெட்டி. இவருக்கு 70 வயதாகியுள்ள நிலையில், கடந்த ஜூலை 28ஆம் தேதி கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது. இவருக்கு முதலில் எந்த அறிகுறியும் தெரியவில்லை. 28-ம் … Read more

வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்களுக்கு “நோ வொர்க் நோ பேமென்ட்”:! தமிழக அரசு எச்சரிக்கை?

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி,நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர்,வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இதுதொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கை சுற்றறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் எழுதியிருக்கும் அந்த எச்சரிக்கை சுற்றறிக்கையில் அவர் கூறியுள்ள வாறு ஆகஸ்ட் 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஊழியர்களுக்கு “நோ வொர்க் நோட் பே”என்ற அடிப்படையில் சம்பளப் பிடித்தம் … Read more