திமுக,அதிமுகவை  ஒரே ட்வீட்டில் அதிர வைத்த  டிடிவி! ஆடிப்போன ஸ்டாலின், எடப்பாடி!

தமிழகத்தில் இப்பொழுது பெரிய பிரச்சினையாக நிலவி வருவது நீட்  தேர்வும்  அதன் அச்சத்தில் மாணவர்கள் உயிரை மாய்த்து கொள்வதும் ஆகும்.நீட் தேர்வின் அச்சத்தின் காரணமாக தமிழ்நாட்டில் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:” நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்வது பெரும் துயரத்தையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்த தீய சக்தியான திமுகவும் அதனை செயல்படுத்திய … Read more

முதல்வரை விமர்சித்த டிடிவி தினகரன்! அதிகார போதையில் தள்ளாடுகிறாரா?

முதல்வர் தமிழகத்தில் இதுவரை மூச்சு காட்டாமல் இருந்த சில காலங்களுக்கு மூச்சு காட்டாமல் இருந்த டிடிவி தினகரன் திடீரென்று முதல்வரை விமர்சித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் பல்லாவரத்தில் மேம்பாலம் திறப்பு விழா முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றிருந்தது இதனை குறித்து டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “ஐந்து பேருக்கு மேல் பொது இடத்தில் கூட கூடாது என்று சாமானிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு தனக்கு … Read more

சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று!!

சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. லோகநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி ஆரம்பித்து தொடர்ந்து மூன்று நாட்கள் தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றது. இதில் பங்கேற்கும் அனைத்து எம்.எல்.ஏ.களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. லோகநாதன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் … Read more

இந்தியாவிலும் தமிழகத்திலும் முதலிடத்தில் உள்ள  ஹேஷ்டேக்!

பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து பாஜகவினர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். குறிப்பாக சுற்றுப்புற பாதுகாப்புக்காக நகர்ப்புற மக்களுக்கு துணிப்பைகள் வழங்குதல் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் , ரத்த தான முகாம்கள் போன்ற நலத்திட்டங்களை மேற்கொள்கின்றனர்.  பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளில் சென்னையில் பாஜகவினர் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் எல் முருகன் பிரதமரின் பிறந்த … Read more

திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக பொன். ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி-மதுரை நெடுஞ்சாலையில் 70 அடி உயர பாஜக கொடி ஏற்றப்பட்டது. இதனை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஏற்றிவைத்தார். மேலும் ஏழை எளியோருக்கு வேட்டி சேலைகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.” நீட் தேர்வு விவகாரத்தில் அச்சத்தில் மாணவர்கள் உயிரிழப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினர் பிணந்தின்னி கழுகுகளைப் போல அலைகின்றனர். அரசியல் கட்சியினர் குழப்பம் நீட் … Read more

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2020 -21 ஆண்டுக்கான துணை மதிப்பீடு!

சட்டப்பேரவை கூட்டத்தில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான துணை மதிப்பீட்டை மதிப்பீட்டுக்கான 12845.20 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கக் கோரி துணை முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை தாக்கல் செய்தார். தமிழ்நாட்டு அரசின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முதல்  துணை மதிப்பீடுகளை 2020ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 16ஆம் நாள் அன்று சட்டப்பேரவை முன்வைத்து ஆற்றிய உரை பின்வருமாறு: “2020-2021 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை இம்மாமன்றத்தின் முன் வைக்க விழைகிறேன். துணை மானியக் … Read more

எதிர்க்கட்சிதலைவர் மு க ஸ்டாலினின் செயலால் வருந்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

உலகமெங்கும் கொரோனாபேரிடர் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எதிர் கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் இன் குறை கூறும் தன்மையைக் கண்டு முதல்வர் பழனிசாமி வருந்துவதாகவும் திமுகவிற்கு விமர்சனத்தையும் அளித்துள்ளார். குறை சொல்வதற்கு என்ற உள்ள கட்சி திமுக தான். திமுக வினர் நோயில் கூட இன்றைக்கு அரசியல் செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து அவர்களது கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு செய்தியாளர் … Read more

எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் எம்.சி.சந்திரன் கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் எம்.சி.சந்திரன் (வயது 75). அண்மையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறி வந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இன்று காலை திடீரென்று அவரின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து வென்ட்டிலேட்டர் பொருத்த மருத்துவர்கள் முடிவு … Read more

காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க பேனர்கள் அகற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

காஞ்சிபுரத்தில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர்களை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் அகற்றி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம், செல்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளுக்கான விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ளார். இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் விதிகளை மீறி ஆக கிலோமீட்டர் தொலைவில் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க … Read more

இரண்டு நாட்களுக்குப் பின்பு எழுச்சி கண்ட பங்குச்சந்தை!

கடந்த இரண்டு நாட்களாக இழப்பை மட்டுமே சந்தித்த பங்குச்சந்தை செப்டம்பர் 10 அன்று காளையின் பாய்ச்சலில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 646 புள்ளிகள் உயர்ந்து 38,840 ஆக  நிலைபெற்றது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 171 புள்ளிகள் அதிகரித்து 11,449 ஆகவும் முடிந்தது.  பங்குச் சந்தையின் ஜாம்பவானாக திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  பங்குகள் அதிக வரவேற்பு கிடைத்தது. எஸ் அண்ட் பி பிஎஸ்இ சென்செக்ஸ்துறை ரீதியாக, எரிசக்தி, எண்ணெய் மற்றும் … Read more