கன்னியாகுமரி தொகுதி எம்.பி. உடல்நிலை கவலைக்கிடம்… சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!

கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நோய்த் தொற்றானது சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர்கள் என யாரையும் விட்டுவைப்பதில்லை. அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமாருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதன் … Read more

அம்பேத்கர் விருது பெற்ற மூத்த அரசியல் தலைவர் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி. சென்னை நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் குடியிருப்பில் வசித்து வருகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 94). தமிழக அரசியல் தலைவர்களில் மிகவும் எளிமையான ஒரு தலைவர் என்றால் அது இவர் தான். இவருடைய 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் வசூலித்து கொடுத்தது. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே … Read more

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது.. முதல்வர்!!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்று முதலமைச்சர் கூறினார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகள், வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், வேலூர் மாவட்டத்தில் ரூ.73.53 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதுமட்டுமல்லாமல் ரூ.169.77 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் முதலமைச்சர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், வேலூர், … Read more

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்

திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த ரகுமான்கான் 1996 இல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், இரண்டு முறை தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைதலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியிலும், 1989 இல் பூங்காநகர் தொகுதியிலும், 1996 இல் இராமநாதபுரம் தொகுதியிலும் … Read more

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு??

அந்நிய செலாவணி சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து உள்ளது.  இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 74.78 ஆக இருந்தது. வர்த்தகத்தின் இறுதியில் முந்தைய தினத்தை காட்டிலும் ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து 74.88 ஆக நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 74.73 வரையிலும் குறைந்த பட்சமாக 74.89 வரையிலும் சென்றது. பங்கு … Read more

அதிமுகவின் முன்னாள் எம்பி லட்சுமணன் திமுகவில் இணைந்தார்

Lakshmanan

அதிமுகவின் முன்னாள் எம்பியும் விழுப்புரம் மாவட்ட செயலாளராக பதவி வகித்தவருமான லட்சுமணன் இன்று திமுகவில் இணைந்தார். கொரோனாவால் பொதுமக்கள் அல்லல்படும் இந்நேரத்திலும் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் அடுத்து நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதில் முதல் கட்டமாக மாற்று கட்சியில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தங்கள் வசம் கொண்டு வரும் வேலையை ஒவ்வொரு கட்சியும் செய்து வருகின்றன. இதில் முதன்மையாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக திமுகவில் அதிருப்தியில் இருந்த வி.பி துரைசாமி,தற்போதைய சட்டமன்ற … Read more

தள்ளாடும் வயதிலும் சொந்த உழைப்பில் வாழும் 85 வயது மூதாட்டி!! சாதனைப் பயணம்..!

85 வயதிலும் யாருடைய உதவியையும் எதிர்பாராமல், சொந்த உழைப்பில் வாழும் மூதாட்டியின் வெற்றிப் பயணம். விருதுநகர்: ரோசல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலன் தெருவை சேர்ந்தவர் கலாதேவி (வயது 85). இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இளம் வயதிலேயே கணவனை இழந்த இவர் கடந்த 60 வருடமாக நைலான் நூல் மூலம் பொம்மைகள் செய்து பல இடங்களுக்குச் சென்று விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் வந்த வருமானத்தைக் கொண்டு தனது மகன் மற்றும் மகளுக்கு திருமணம் … Read more

இன்று (18.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்று (18.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்? டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 80.45என்னிலிருந்து80.90-க்கும் ,டீசல் விலை 78.31நிற்கும் விற்கப்படுகிறது. சென்னையில் சராசரியாக லிட்டருக்கு ரூபாய் 83.90-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 78.89-க்கும் விற்கப்படுகிறது. தமிழகத்தில் முன்னணி பெட்ரோல் பங்குகளான  இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலின்படி இன்றைய (18.8.2020)பெட்ரோல் மற்றும் டீசலின் விலை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 83.90-க்கு … Read more

கோஷ்டி அரசியலால் திமுக பக்கம் நகரும் அதிமுகவின் முக்கிய பிரபலம்! குழப்பத்தில் அதிமுக தலைமை

Edappadi Palanisamy and O Panneerselvam-News4 Tamil Online Tamil News

தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக என இரண்டும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்காக வியூகங்களை வகுத்து வருகின்றன. தற்போது ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவில் அடுத்து யார் முதல்வர் என்ற போட்டி பூதாகரமாக கிளம்பியுள்ளது. தற்போது கிளம்பிய இந்த பிரச்சனையை தற்காலிகமாக சமாளிக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் என இருவரும் இணைந்து சமரச அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட போட்டியானது ஓய்ந்தபாடில்லை. அதேபோல திமுகவிற்கு மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக பெரும் தலைவலியை … Read more

தமிழகத்தில் காலூன்ற முக்கிய கட்சியை கபளீகரம் செய்ய தயாரான பாஜக! அதிர்ச்சியில் தொண்டர்கள்

LMurugan BJP-News4 Tamil Online Tamil News Today

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக, வடமாநிலங்களில் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருந்தாலும், தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அக்கட்சியால் கால் பதிக்க முடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில், தன்னுடைய சட்டமன்ற பிரதிநிதித்துவ கணக்கை தொடங்க முடியாமல் கடுமையாக போராடுகிறது. கலைஞர், ஜெயலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாத நிலையில், தமிழகத்தில் கால் பதிக்க பாஜக எடுத்த முயற்சிகள் அனைத்தும் இதுவரை கைகொடுக்கவில்லை. பாஜக தற்போது வரை, அதிமுக கூட்டணியில் இருந்தாலும், அது தனக்கு கிடைக்க வேண்டிய … Read more