திரைத்துறையில் மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் ஜொலிக்கும் பிரபலங்கள்!!

0
56
#image_title

திரைத்துறையில் மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் ஜொலிக்கும் பிரபலங்கள்!!

திரையுலகில் நடிகர்,நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களுக்காக பெறும் சம்பளத்தை கொண்டு ஹோட்டல்,ரியல் எஸ்டேட்,ரிசார்ட்,ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் முதலீடு செய்து பணத்தை பெருக்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை எதில் முதலீடு செய்யலாம் என்று ஆர்வம் காட்டும் இவர்கள் மற்ற எதிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதில்லை.ஆனால் திரையுலகில் இருக்கும் ஒரு சிலர் திரைத்துறையில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல் தங்களின் திறமைகளை மற்ற துறைகளிலும் வெளிப்படுத்தி பாராட்டை பெற்று வருகின்றனர்.அந்த வகையில் நடிப்பை தாண்டி தன் சொந்த திறமைகளில் சிறந்து விளங்கும் நடிகர்,நடிகைகளின் விவரம் இதோ.

1. வித்யா பிரதீப்

இவர் திரைப்பட நடிகை,மாடல்,விஞ்ஞானி ஆவார்.கடந்த 2014 ஆம் ஆண்டு எ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘சைவம்’ திரைப்படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார்.

அதன் பிறகு பசங்க 2,தடம்,இரவுக்கு ஆயிரம் கண்கள்,களரி,மாறி 2,உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.சினிமாவை தவிர விளம்பர படங்களில் நடித்துள்ள இவர் “சுவை” என்கிற நெய் தயாரிப்பு பிராண்டிற்கு விளம்பர தூதராக நடித்திருக்கிறார்.இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாயகி’ சீரியலில் கதாநாகியாக நடித்து மிகவும் பிரபலமானார்.

இவர் நடிகை மட்டுமல்ல ஒரு சிறந்த விஞ்ஞானி ஆவார்.பயோடெக்னாலாஜி பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற இவர்,சென்னையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி இருக்கிறார்.Stem Cell Biology துறையில் டாக்டர் மற்றும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.இவரின் ஸ்டெம் செல் தொடர்பாக ஆராய்ச்சி International Journal of Cell Therapy இதழில் வெளி வந்துள்ளது.

2.பாண்டு

இவர் தமிழ் திரைத்துறையில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி இருக்கிறார்.தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பால் மக்களை கவர்ந்தார்.தமிழில் நாட்டாமை,காலமெல்லாம் காதல் வாழ்க,சின்னத்தம்பி,காதல்கோட்டை உள்ளிட்ட படங்களில் இவரின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.படங்களை தவிர்த்து தினம் தினம் தீபாவளி, உறவுகள் சங்கமம்,வள்ளி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலுல் நடித்துள்ளார்.இவர் நடிப்பைத் தாண்டி நகைச்சுவை பேச்சாளர்,ஓவியர்,தொழில் முனைவோர் என பன்முகம் கொண்டவராக இருந்துள்ளார்.

ஓவியக் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் தென்னிந்தியாவில் ஓவியத்தில் ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே நபர் என்ற பெருமையை கொண்டவர்.தனது கற்பனை ஓவியத் திறனை வைத்து 43 ஆண்டுகளுக்கு முன்பு ‘கேபிடல் லெட்டர்ஸ்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்கி சிறந்த தொழில் முனைவோராகவும் வலம் வந்தார்.இந்த நிறுவனம் பெயர் பலகைகளை வடிவமைக்கும் வேலைகளை செய்து வந்தது.நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்பலகையை இவர் அழகுற வடிவமைத்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் தற்போதைய சின்னமான குடை,சன் தொலைக்காட்சியின் சின்னம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட சின்னங்களை வடிவமைத்தார். திமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர். அதிமுக என்ற பெயரில் கட்சியைத் தொடங்கியபோது, பாண்டுதான் அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3.பரத் ரெட்டி

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னைபோல்’ படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.நடிகர் சந்தானம் அவர்களின் படங்களில் அதிகம் நடித்துள்ளார்.

பரத் ரெட்டி நடிகர் மட்டுமல்ல.இவர் ஒரு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.ஆர்மீனியாவின் யெரெவன் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றுள்ள இவர் கார்டியாலஜியில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்கிறார்.இதனை தொடர்ந்து
அப்பல்லோ மருத்துவமனை,எல்பிட் மருத்துவ நோயறிதல் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள செஞ்சுரி மருத்துவமனை ஆகியவற்றில் ஜூனியர் கன்சல்டிங் கார்டியலஜிஸ்ட்டராக பணியாற்றத் தொடங்கினார்.தற்பொழுது திரைத்துறை மற்றும் மருத்துவ துறை என இரண்டிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

4.சிவகுமார்

கடந்த 1965 ஆம் ஆண்டு வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.அதன் பிறகு பல தமிழ் படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வந்தார். ஓவியக் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் தனது கற்பனை ஓவியத் திறமையால் மிகவும் புகழ் பெற்றார்.

இதனை தொடர்ந்து சிறந்த சொற்பொழிவாளர்,மேடை பேச்சாளர் என பன்முகம் கொண்ட சிவகுமார் கம்பராமாயணத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார்.தமிழகத்தில் இவர் நடத்தும் கம்பராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவையாகும்.