அடுத்த ஆண்டுக்கான க்யூட் இளங்கலை நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு..!

0
96

இந்தியாவில் 45 மத்திய பல்கலைகழக்கங்கள் உள்ளது. இந்த பல்கலைகழங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் சேர மத்திய அரசு பொது நுழைவு தேர்வு நடத்துகிறது. நடப்பு கல்வியாண்டில் 9 லட்சத்து 68 ஆயிரத்து 201 பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் வெளிவந்து மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், அடுத்தாண்டுக்கான இளங்கலை படிப்புக்கான கியூட் தேர்வு தேதியை யூஜிசி அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் 2023ம் ஆண்டுமே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை கியூட் இளங்கலை தேர்வுகள் நடைபெறும் எனவும் ஜூன் மாதத்தில் கியூட் முதுநிலை தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

அந்த தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலை மாதத்திற்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அடுத்த கல்வியாண்டிற்கான நீட், ஜே.இ.இ உள்ளிட்ட தேர்வுகளுக்கான தேதியையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.