நீர்வளத்துறை மூலம் மரங்களுக்கு குறியீடு பணி தீவிரம்!  

0
94
Intensity of code work for trees by the Water Resources Department!
Intensity of code work for trees by the Water Resources Department!

நீர்வளத்துறை மூலம் மரங்களுக்கு குறியீடு பணி தீவிரம்!

தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கொம்புகாரன் புலியூர், மேலப்பட்டி, தங்கம்மாள்புரம், சிங்கராஜபுரம் உள்ளிட்ட கிராமத்தின் மூல வைகை ஆற்று பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்டிபட்டி நீர்வளத்துறை பாசன பிரிவின் மூலம் நில அளவை செய்து தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி எல்லை கற்கள் ஊன்றி வரையறுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஆண்டிபட்டி நீர்வளத்துறை பாசன பிரிவின் மூலம் தனிநபர் சர்வே கற்கள் பகுதிகளில் உள்ள தென்னை, இலவம்,மாமரம் உள்ளிட்ட மரங்களுக்கு குறியீடு வண்ணம் தீட்டு பணி நடைபெற்று வருகிறது, இப்பணியை தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் ‌உத்தரவின் பேரில் செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இப்பணியின் போது மஞ்சளாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ரமேஷ், ஆண்டிபட்டி உதவி பொறியாளர் மொய்தீன் ஆரிப்ரகுமான், ஆய்வாளர் சுரேந்திரன், மற்றும் களப்பணியாளர்கள் கோபால், ரவி, உடனிருந்தனர்.