ஆன்லைன் வகுப்புகளின் பிரச்சனைகள் குறித்து தமிழக அரசை விளாசிய சென்னை உயர்நீதிமன்றம்!

0
67

ஆன்லைன் வகுப்புகள் குறித்து தமிழக அரசை விளாசிய சென்னை உயர்நீதிமன்றம்!

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கினை வரும் வியாழக்கிழமை அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க தயாராகின.

ஆனால் அனைத்து மாணவர்களும் பயன் அடைகிறார்களா? என்பது கேள்விக்குறியே

இதன் மூலம் ஆன்லைன் வகுப்புகள் பெறும் மாணவர்களின் பாதிப்புகள் குறித்து வழக்கு தொடரப்பட்டது. அதில் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும்,மேலும் ஆபாசமான விளம்பரங்கள் வருவதாலும் ஆன்லைன் வகுப்புகள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உலகம் முழுவதும் இன்று ஆன்லைன் வகுப்புகள் தான் எடுக்கப்பட்டு வருகின்றன என்ற வாதத்தை முன்வைத்தார்.

ஆனால் நீதிபதிகள் மலைப்பகுதியில் வசிக்கக்கூடிய மாணவர்களுக்கு எப்படி ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன? இரண்டிற்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள வீட்டில் எப்படி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன?

மேலும் ஆன்லைன் வகுப்புகளின் சரியான விதிமுறைகளை  பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.

அனைத்து கேள்விகளுக்கும் வருகிற 27ம்தேதி விரிவாக விளக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

author avatar
Kowsalya