லண்டனுக்கு பயணம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்! காரணம் இதுதான்  வெளிவந்த தகவல்! 

0
185
#image_title

லண்டனுக்கு பயணம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்! காரணம் இதுதான்  வெளிவந்த தகவல்! 

வருகின்ற மே 20 -ஆம் தேதிக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் லண்டன் செல்வதாக தகவல் வெளிவந்துள்ளது.

வருகின்ற மே 2-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் முதலீட்டாளர்கள மாநாடு மூலம் முதலீடுகளை இழுக்க தமிழக அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இதனால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்கள் குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

மேலும் முதல்வர் ஸ்டாலின் மே 20-ஆம் தேதிக்கு பிறகு லண்டன் செல்ல இருப்பதாகவும் அதன் பிறகு ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கும் பயணம் செல்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த பயணமானது ஒரு வார கால பயணமாக இருக்கும் என தெரிகிறது.

தமிழ்நாட்டில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணமானது  முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை சந்திக்க இருப்பதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சரின் இந்த வெளிநாட்டு பயணம் குறித்தும் மே 2-ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.