குடும்பம் சார்ந்த கட்சியாக காங்கிரஸ் கட்சி மாறிவிட்டது! பாஜக தலைவர் ஜேபி நட்டா விமர்சனம்!!

0
29

குடும்பம் சார்ந்த கட்சியாக காங்கிரஸ் கட்சி மாறிவிட்டது! பாஜக தலைவர் ஜேபி நட்டா விமர்சனம்!!

 

தற்பொழுது காங்கிரஸ் கட்சியானது மக்களுக்கான கட்சியாக இல்லாமல் குடும்பம் சார்ந்த கட்சியாக மாறிவிட்டது என்று பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்கள் சமீபத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசியுள்ளார்.

 

குஜராத் மாநிலத்தில் பஞ்சமகால் மாவட்டத்தில் கோத்ரா என்ற பகுதியில் பாஜக கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா அவர்கள் காங்கிரஸ் கட்சியானது சோனியா காந்தி, இராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூன்று பேரைக் கொண்ட குடும்பம் சார்ந்த கட்சியாக மாறிவிட்டது” என்று பேசினார்.

 

அந்த பொதுக்கூட்டத்தில் பாஜக கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா அவர்கள் “காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். தற்போதைய காலத்தில் எதிர்கட்சிகளுக்கு மக்கள் நலனில் அக்கரை இல்லாத குடும்ப கட்சிகளாக மாறிவிட்டது. உலக அளவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பெரும் பாராட்டுகள் கிடைக்கும். அப்பொழுது எல்லாம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கொந்தளிக்கின்றனர். நம் பாரத பிரதமரை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அனைவரும் நாட்டை எதிர்க்க தொடங்கியுள்ளனர் என்பதை நியாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

 

இந்திய ஜனநாயகம் மிகுந்த ஆபத்தில் உள்ளதாக பிரிட்டன் வரை சென்று இராகுல் காந்தி அவர்கள் சொல்கிறார். ஆனால் 1975ம் ஆண்டு எமெர்ஜென்சியை அமல்படுத்தி 1.5 லட்சத்துக்கும் அதிகமானவர்களை சிறையில் அடைத்தது இராகுல் காந்தி அவர்களின் பாட்டி இந்திரா காந்தி அவர்கள் தான். ஆனால் தற்பொழுது இராகுல் காந்தி அவர்கள் ஜனநாயகம் பற்றி பேசுகிறார்.

 

காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கீழ்தரமான அரசியலில் ஈடுபடுகின்றனர். அது மட்டுமில்லாமல் பிரதமரை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் பாம்பு, டீ விற்பனையாளர் போன்ற வார்த்தைகளை பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக பயன்படுத்துகின்றனர்.

 

நாட்டை காப்பாற்றுவதில் குறிக்கோளாக செயல்படும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மத்தியில் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றுவதில் எதிர்க்கட்சிகள் குறிக்கோளாக செயல்பட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டுக்காக போராடுகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி, இராகுல் காந்தி, மற்றும் பிரியங்கா காந்தி மூன்று பேரும் சேர்ந்த குடும்பக் கட்சியாக மாறிய காங்கிரஸ் தனது கட்சியை சேர்ந்த குடும்பத்திற்காக போராடுகின்றது. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் மற்ற காங்கிரஸார் ஒப்பந்தம் அடிப்படையில் கட்சியில் இருக்கின்றனர்” என்று ஜேபி நட்டா அவர்கள் கூறியுள்ளார்.