நான்கு மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை!!

0
48
#image_title

நான்கு மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்! தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை!!

நான்கு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில் பாஜக முன்னிலை வகிக்கின்றது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதே போல மிசோரம் மாநிலத்திலும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தலுக்கான முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நாளை(டிசம்பர்4) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இன்று(டிசம்பர்3) காலை முதல் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ள நிலையில் தற்போதைய நிலவரப்படி பாஜக முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கிய நிலையில் பாஜக கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அதே போல மத்தியப் பிரதேசம் மாநிலத்திலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பாஜக 15 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிந்த பிறகு தொடர்ந்து இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளது.