மூன்றாவது முறையாக வந்த கொலை மிரட்டல்! அதிர்ச்சியில் முகேஷ் அம்பானி!!

0
35
#image_title

மூன்றாவது முறையாக வந்த கொலை மிரட்டல்! அதிர்ச்சியில் முகேஷ் அம்பானி!!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் மின்னஞ்சல்கள் வருவதை அடுத்து போலிசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் தற்பொழுது மூன்றாவது முறையாக முகேஷ் அம்பானி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளது.

ஏற்கனவே முகேஷ் அம்பானி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து இன்று(அக்டோபர்31) முகேஷ் அம்பானி அவர்களுக்கு மூன்றாவது முறையாக கொலை மிரட்டல் விடுத்து 400 கோடி ரூபாய் கேட்டு மின்னஞ்சல் வந்துள்ளது.

இன்று(அக்டோபர்31) வெளியான மின்னஞ்சலில் “என்னுடைய தேவை 400 கோடி ரூபாயாக மாறி இருக்கின்றது. இந்த தொகையை நீங்கள் தரவில்லை என்றால் உங்களை கொலை செய்துவிடுவேன். காவல் துறையினர் என்னதான் முயற்சி செய்தாலும் என்னை கண்டுபிடிக்க முடியாது. கைது செய்ய முடியாது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி அவர்களுக்கு கொலை மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரியை கண்டுபிடிக்க மும்பை காவல் துறையினர் பெல்ஜியத்தில் இருக்கும் விரிச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் நிறுவனத்தை சர்வதேச காவல்துறையினரின் உதவியுடன் அணுகியது.

முதல்கட்டமாக வெளியான தகவலில் கொலை மிரட்டல் வந்த மின்னஞ்சல் பெல்ஜியத்தின் விபிஎன் நெட்வொர்கில் இருந்து வந்துள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது. ஆனால் கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் உலகின் வேறொரு மூலையில் இருந்து கொண்டு கூட மின்னஞ்சல் அனுப்பியிருக்கலாம் என்று மும்பை காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதே போ தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்களுக்கு கடந்த வாரம் கொலை மிரட்டல் வந்தது. அதில் “நீங்கள் 20 கோடி ரூபாய் தர வேண்டும். அவ்வாறு தரவில்லை என்றால் உங்களை கொலை செய்து விடுவோம். இந்தியாவில் திறமையாக துப்பாக்கி சுடும் நபர்கள் இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும் இது குறித்து முகேஷ் அம்பானி அவர்களின் தரப்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மும்பை காம்தேவி காவல்நிலையத்தில் பிரிவு 387, 506(2) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கொலை மிரட்டல் விடப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று(அக்டோபர்31) மூன்றாவது முறையாக பணம் கேட்டும் கொலை மிரட்டல் விடுத்தும் மின்னஞ்சல் வந்துள்ளது.