கல்லால் தாக்கி கணவர் கொலை!  நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி மற்றும் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

0
144
#image_title

கல்லால் தாக்கி கணவர் கொலை!  நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி மற்றும் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

சேலத்தில் கணவரை கொலை செய்த மூன்று நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரருக்கும் காவல்துறையிடையே கடும் வாக்குவாதம்.

சேலம் உடையாப்பட்டி அருகே அதிகாரிப்பட்டி பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டீ கடையின் காசாளராக லோகேஸ்வரன் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு லோகேஸ்வரன் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் லோகேஸ்வரனை கல்லால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த லோகேஸ்வரனை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே லோகேஸ்வரன் உயிரிழந்தார். தகவலறிந்த அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த உதவி ஆணையாளர்கள் வெங்கடேஷ், ஆனந்தி ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தைக்கு உடன்படாத உறவினர்கள் தொடர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட இறந்தவரின் மனைவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து உறவினர் கூறும் போது, முன்விரோதம் காரணமாக எனது கணவரை மணிகண்டன் உள்ளிட்ட மூன்று பேர் கொலை செய்துவிட்டனர். எனவே கொலை செய்த மூன்றுபேர் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.கொலை செய்யப்பட்ட கணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது

author avatar
Savitha