அதிமுக Vs பாஜக.. மாஜி அமைச்சர்களை சந்திக்க மறுத்த அமித்ஷா! இபிஎஸ் முடிவு என்ன?

0
105
#image_title

அதிமுக Vs பாஜக.. மாஜி அமைச்சர்களை சந்திக்க மறுத்த அமித்ஷா! இபிஎஸ் முடிவு என்ன?

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கருத்து மோதல் உச்சத்திற்கு சென்று கூட்டணி முறிவு ஏற்படும் நிலைக்கு வந்துவிட்டது.நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சனாதனம் குறித்த கருத்தால் இரு கட்சிகளிடையே பிளவு உண்டாகி இருக்கிறது.கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் ‘அறிஞர் அண்ணா’ சனாதனம் குறித்து தவறாக பேசியதால் முத்துராமலிங்க தேவர் கடும் கோபமடைந்து அவரை கண்டித்தார்.

இதனால் பயந்து அறிஞர் அண்ணா மன்னிப்பு கேட்டார் என்று 1956 ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் இந்த நிகழ்வு பற்றி கூறினார்.இந்நிலையில் அண்ணா குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து விட்டார் அண்ணாமலை என்று அதிமுக நிர்வாகிகள் கொந்தளித்தனர்.கடந்த செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளன்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் அண்ணாமலையை கடுமையாக சாடினார்.

எங்கள் தலைவர் அண்ணா பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது.அண்ணாவின் அரசியல் அனுபவத்தை ஒப்பிட்டால் அண்ணாமலை கத்துக்குட்டி என்று கூறினார்.மேலும் நானும் ரவுடிதான் என்பது போல் நானும் தலைவன் தான் என்று காட்டுவதற்காக அண்ணாமலை வரலாறு தெரியாமல் பேசுகிறார் என்று ஆவசேமாக பேசினார்.

மேலும் அதிமுகவின் மற்ற நிர்வாகிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் சி.வி.சண்முகம் அவர்களின் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக அண்ணாமலை சில கருத்துக்களை தெரிவித்தார்.இதனை தொடர்ந்து இது இப்படியே சென்றால் சரி பட்டு வராது என்று பாஜக உடனான கூட்டணியை முறித்து கொள்ளலாம் என அதிமுக அதிரடி முடிவு ஒன்றை எடுத்தது.அதன்படி இனி யாரும் பாஜக குறித்தோ அண்ணாமலை குறித்தோ பொது வெளியில் பேச வேண்டாம்.பாஜக உடனான கூட்டணி முறிந்து விட்டது.தேர்தல் வரும் சமயத்தில் கூட்டணி குறித்த நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெரிவிக்கப்படும் என்று அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டது.இதனை சற்றும் எதிர்பாராத அண்ணாமலைக்கும் பாஜகவுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தும் நிகழ்வாக இது இருந்தது.

மேலும் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும்,முக்கிய நிர்வாகிகளுமான வேலுமணி,தங்கமணி,சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் நேற்று தீடிர் பயணமாக டெல்லி சென்றனர்.அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கூட்டணி முறிவு குறித்த காரணத்தை தெரிவிக்க திட்டமிட்டனர்.

ஆனால் அமித்ஷா வேறு விஷயங்களில் பிஸியாக இருந்ததால் அவர்கள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பியுஷ் கோயலை சந்தித்து பேசினார்.கூட்டணி முறிவு குறித்தும் தமிழக பாஜக தலைவரை மாற்றினால் தான் கூட்டணி வைப்போம் என்பது குறித்தும் பியுஷ் கோயலிடம் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து சற்று பொறுமை காக்கும் படி தெரிவித்த பியுஷ் கோயல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூடிய விரைவில் இது குறித்து இபிஎஸ் உடன் பேச திட்டமிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

விரைவில் பிரதமர் மோடி அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் பிரச்சனை சுமுகமாக முடிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்களிடம் பியுஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.இந்நிலையில் இபிஎஸ் என்ன திட்டம் வைத்து இருக்கிறார்? அடுத்து என்ன நடக்க போகிறது என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.