டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா?? மக்களே எச்சரிக்கை!!

0
149
#image_title

இன்றைய நாட்களில் டீ குடிக்காமல் யாருக்கும் பொழுதே விடிவதில்லை. சிலர் எல்லாம் காலையில் பல் கூட தேய்ப்பதில்லை. எழுந்தவுடன் டீ குடித்து விட்டு தான் வேறு வேலை பார்ப்பார்கள். இப்படி வெறும் வயிற்றில் டீ குடிப்பது ஒரு கெட்ட பழக்கமாகும். வெறும் வயிற்றில் டீ குடிப்பது நல்லதா? ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம் இதனால் நமது உடலுக்கு என்ன பாதிப்புகள் வருகிறது என்பதை பார்க்கலாம்.

காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் வயிற்றில் அசிடிட்டி உண்டாகிறது. காலையில் நாம் சாப்பிடுவதற்காக நம் குடலில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உற்பத்தி ஆகும். நாம் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் உற்பத்தி ஆகும் அமிலத்தை அது தடுக்கிறது. அதாவது அதன் உற்பத்தி அளவை குறைக்கிறது. இதனால் நம் வயிற்றில் கேஸ் உண்டாகிறது. நாம் சாப்பிடும் உணவு பொருட்கள் எளிதில் ஜீரணம் ஆகாது. உணவு ஜீரணம் ஆகாததால் மலச்சிக்கல் உண்டாகும்.

எல்லா வித நோய்களுக்கும் மலச்சிக்கல் தான் மூல காரணமாகும். வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் நாமே நமக்கு மலச்சிக்கலை உண்டாக்கி கொள்கிறோம். இது நம்முடைய பசி உணர்வையும் குறைக்கிறது.
அடுத்ததாக நீங்கள் ஒரு 4 அல்லது 5 டீ குடிப்பதனால் உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும். டீ தூக்கமின்மை பிரச்சினையை உருவாக்கும். நீங்கள் அதிகப்படியான டீ குடிக்கும் போது இரவில் உங்களுக்கு நிம்மதியான தூக்கமே கிடைக்காது.

மூன்றாவதாக நீங்கள் சாப்பிட்ட உடனே டீ குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், டீயில் உள்ள டானிக் ஆசிட் நாம் சாப்பிடும் பொருட்களில் உள்ள இரும்பு சத்துக்களை நம் உடலில் சேர விடாமல் செய்கிறது. இதனால் நம் உடலில் இரும்பு சத்து குறைவதால் அனிமியா பிரச்சினை உண்டாகிறது. உடலில் ரத்தம் குறைவாக இருப்பதால் அனிமியா வருகிறது. சாப்பிட்டவுடன் டீ குடிப்பவர்களுக்கு தான் இந்த பிரச்சினை வருகிறது.

நான்காவதாக டீயில் காஃபின் என்ற பொருள் உள்ளது. இது காபியை விட டீயில் தான் அதிகமாக உள்ளது. இந்த காஃபின் அதிகமாக இருப்பதால் இது உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்குகிறது. சரியான இரத்த அழுத்தம் இருப்பவர்களும் டீ குடிப்பதால் இரத்த அழுத்தம் அதிகமாகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் டீ குடிக்காதீர்கள். நாம் வெளியே செல்லும்போது ரோடு ஓரங்களில் இருக்கும் டீ கடைகளில் டீ குடிப்போம். அந்த கடைகளில் பழைய டீத்தூளை வெளியே போடாமல், அது இருக்கும்போதே புதிய டீத்தூளை போட்டு டீ வைப்பார்கள். இது உடலுக்கு மிகவும் கெடுதலானது.

நீங்கள் ஒரு டீ குடிக்கும் போது உங்கள் உடலில் 400 கலோரிகள் சேர்கிறது. ஒரு நாளைக்கு 5 டீ குடிக்கும் போது அது 2000 கலோரி ஆகிறது. இதனால் உங்களின் உடல் எடை அதிகரிக்கிறது. எனவே வெறும் வயிற்றில் டீ குடிக்காமல், காலையில் எழுந்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு 20 நிமிடங்கள் கழித்து 2 பிஸ்கெட் சாப்பிட்டு பிறகு டீ குடிக்கலாம்.

  1. கேஸ், அசிடிட்டி, மலச்சிக்கல், அதிக உடல் எடை, சர்க்கரை வியாதி உள்ளவர்கள், இதயம் சம்பந்தபட்ட பிரச்சினை உள்ளவர்கள் கண்டிப்பாக டீ அருந்த வேண்டாம். கிரீன் டீ, சீரக டீ, மூலிகை டீ போன்றவற்றை அருந்தலாம். இதையும் வெறும் வயிற்றில் அருந்தக் கூடாது.
author avatar
CineDesk