உங்களுக்கு செரிமானப் பிரச்சனை இருக்கின்றதா!!! அதை சரி செய்ய இதை சாப்பிடுங்க!!! 

0
39
#image_title

உங்களுக்கு செரிமானப் பிரச்சனை இருக்கின்றதா!!! அதை சரி செய்ய இதை சாப்பிடுங்க!!!

நமக்கு இருக்கும் செரிமானப் பிரச்சனையை சரி செய்வதற்கு சுண்டைக்காயை பயன்படுத்தினால் மட்டும் போதும். இந்த சுண்டைக்காயின் மற்ற பயன்களை பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செரிமான பிரச்சனைகளை சரி செய்வதில் முக்கிய மருந்தாக பயன்படுவது இந்த சுண்டைக்காய் தான். மேலும் வற்றல் ரகங்களில் சுண்டைக்காய் வற்றல் தனிச் சிறப்பும் அதிக மருத்துவ குணங்களும் பெற்றது.

சுண்டைக்காய் சிறிய அளவில் இருந்தாலும் இது நமக்கு தரும் நன்மைகள் மிகப் பெரிய அளவாகத்தான் இருக்கின்றது. சுண்டைக்காயில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. இரும்புச் சத்து, பொட்டாசியம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் சுண்டைக்காயில் உள்ளது. இனி சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சுண்டைக்காயின் முலம் கிடைக்கும் மருத்துவ குணங்கள்…

* சுண்டைக்காய் நம் வயிற்றில் உள்ள கிருமிகளை அழித்தா வெளியேற்றுகின்றது. மேலும் வயிற்றை சுத்தமாக எந்த கிருமிகளும் இல்லாத வகையில் வைத்துக் கொள்ள உதவி செய்கின்றது.

* முன்னர் கூறியது போலவே செரிமான பாதையை சீராக்கி செரிமான பிரச்சனையை சரி செய்கின்றது.

* கழிச்சல் நோயை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு சுண்டை வற்றல் பொடியை தயிரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

* சுண்டையின் பழங்களை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமடையும்.

* சுண்டைக்காயை சாப்பிடுவதால் குடலை பாதுகாக்கின்றது. அதாவது குடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழித்து விடுகின்றது. மேலும் நல்ல நுண்கிருமிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கின்றது.

* குழந்தைகள் மலம் கழிக்கும் பொழுது புழுக்கள் இருந்தால் சுண்டைக்காயை பொடியாக்க அரைத்து அவர்களுக்கு கொடுத்து வர வேண்டும்.