உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? கண்டிப்பாக சர்க்கரை நோய் தான்!

0
183

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? கண்டிப்பாக சர்க்கரை நோய் தான்!

தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது சர்க்கரை நோய். இதனுடைய அறிகுறி பற்றி இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அதனை சர்க்கரை நோய் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளது. முதலாவதாக நம் உடலில் இருக்கக்கூடிய இன்சுலின் அளவு சுரக்காத நிலை. இந்த நோயானது பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும்.

அடுத்ததாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வகையான சர்க்கரை நோய் தான் ஏற்படுகின்றது. இவை மாறிவரும் உணவு முறையின் காரணமாகவும் நாம் எந்த ஒரு வேலையிலும் ஈடுபடாமல் இருப்பதினாலும் ஏற்படுகிறது. கணையத்திலிருந்து சுரக்கக்கூடிய இன்சுலின் உடலில் வேலை செய்யாததினால் இந்த வகை சர்க்கரை நோய் உண்டாகிறது. இதன்மூலம் ரத்தத்தின் சர்க்கரை அளவுகள் அதிகமாக இருக்கும்.

அறிகுறிகள்:

அடிக்கடி சிறுநீர் கழிப்பது, இரவு நேரங்களில் நான்கு முதல் ஐந்து முறை சிறுநீர் கழித்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது என உறுதி செய்யப்படுகிறது. இரண்டாவதாக நாவில் வறட்சி ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும் பொழுது அதிக தாகம் ஏற்படும். மூன்றாவதாக மங்கலான கண் பார்வை, உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் உள்ள நீர்கள் வெளியேறுவதின் காரணமாக கண்களில் வறட்சி ஏற்படுகிறது.உடலில் சர்க்கரை நோய் அதிகரித்தால் வேகமாக உடல் எடை கூடுவது மற்றும் உடல் எடை குறைவது என இரண்டுமே மாறி மாறி ஏற்படும்.

 

author avatar
Parthipan K