அரசின் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற விரும்புகிறீர்களா? இன்றே விண்ணப்பியுங்கள்! இதுதான் கடைசி நாள்!

0
135
Tamil Nadu government's professional ethics awareness has started! Honey people don't miss the opportunity!
Tamil Nadu government's professional ethics awareness has started! Honey people don't miss the opportunity!
அரசின் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற விரும்புகிறீர்களா? இன்றே விண்ணப்பியுங்கள்! இதுதான் கடைசி நாள்!

தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில்

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாவட்ட கலந்தாய்வு மூலம் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்
www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசிநாள் 20.07.2022 ஆகும்.
நாள்:07.07.2022 தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத
தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற 8-ம்வகுப்பு, 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்
விண்ணப்பிக்கலாம்.மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்துகொண்டு விண்ணப்பிக்கும்போது(பெயர், தந்தைபெயர், தாயார்பெயர், பிறந்ததேதி,சாதி, அலைபேசிஎண், வீட்டுமுகவரி) ஆகிய விபரங்களை பிழையின்றி பூர்த்தி செய்து இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும்.
மேலும் பயிற்சியில் சேருபவர்களுக்கு தமிழக அரசு ரூ.750 மாதந்தோறும் உதவித்தொகை,விலையில்லாமடிக்கணினி,வரைப்படக்கருவிகள்,விலையில்லாமிதிவண்டி, சீருடை(2செட்)விலையில்லாபாடப்புத்தகம்,வழங்கப்படுகிறது.
மேலும் பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 100% வேலைவாய்ப்புக்கு வழிவகை
செய்யப்படுகிறது. ஆகையால் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசிதேதி 20.07.2022 ஆகும்.விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தேனி, ஆண்டிபட்டி மற்றும் போடி (இருப்பு தப்புக்குண்டுசாலை, உப்பார்பட்டி) ஆகிய இடங்களில் இலவசமாக விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 2021-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 9-ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்யவேண்டும்.
அதற்கு முந்தைய ஆண்டில தேர்ச்சி பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண்களையும்
2022-ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவிடவும். விண்ணப்பகட்டணம் ரூ.50ஐ ஆன்லைன் மூலம் செலுத்த ATM card/Mobile banking ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,தேனி அவர்களை நேரிலோ அல்லது தேனி ஐ.டி.ஐ: 9499055765, ஆண்டிபட்டி ஐ.டி.ஐ :9499055770 போடி ஐ.டி.ஐ: 9499055768 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்  க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.