தமிழகத்தில் 10 ஆண்டுகள் பணியா அல்லது இரண்டு கோடி அபராதமா? கேரளா மருத்துவ மாணவருக்கு வந்த சோதனை!

0
64
10 years in Tamil Nadu or 2 crore fine? Test came to Kerala medical student!
10 years in Tamil Nadu or 2 crore fine? Test came to Kerala medical student!

தமிழகத்தில் 10 ஆண்டுகள் பணியா அல்லது இரண்டு கோடி அபராதமா? கேரளா மருத்துவ மாணவருக்கு வந்த சோதனை!

தற்போது அனைத்து மாணவர்களும் மருத்துவத்துறையை தேடி செல்கின்றனர். அந்த வகையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித் வி ரவி. எம்.பி.பி.எஸ் படித்து முடித்துவிட்டு அவருக்கு அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டின் கீழ் நெல்லை மருத்துவ கல்லூரியில் மேற்படிப்பிற்கு சீட்டு கிடைத்தது.அதன்படி நெல்லை மருத்துவக் கல்லூரியில் டி எம் நியூராலஜி பயின்று, கடந்த செப்டம்பர் 2020ல் தேர்ச்சியுற்றார். ஆனால் தனது சொந்த மாநிலத்தில் இருந்து அருகே உள்ளது என்ற அடிப்படையில் தமிழகத்தில் சீட்டு கிடைத்ததும் அங்கேயே சேர்ந்த அவர் சில ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளார்.

அந்த ஒப்பந்தமே பிறகு அவருக்கு வினையாக வந்து நின்றுள்ளது. அது என்ன ஒப்பந்தம் என்றால், அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டின் கீழ் தமிழகத்தில் படிக்கும் மருத்துவர்கள், படிப்பு முடிந்து 10 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தில் பணியாற்ற வேண்டும் அல்லது ரூபாய் 2 கோடி வரை அபராதம் செலுத்த வேண்டும் என்பது தான்.இதற்கிடையில், மருத்துவர் ஸ்ரீஜித்திற்கு நாகப்பட்டினத்தில் துணை அறுவை சிகிச்சை மருத்துவர் பணி வழங்கப்பட்டது. அதற்கு நல்ல சம்பளமும் வழங்கப்பட்டது.

ஆனாலும் அவர் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பணியாற்ற விருப்பமில்லாமல் இருந்துள்ளார்.2020 இல் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்ட பணியில் சேர தவறியதால், அவர் பயின்ற நெல்லை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் கடந்த 2021 செப்டம்பர் 20ஆம் தேதி மருத்துவர் ஸ்ரீஜித்தை 2 கோடி செலுத்துமாறு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது படித்து முடித்து தமிழகம் விட்டு செல்ல நினைத்த மருத்துவர் ஸ்ரீஜித்திற்கு தடங்களாக நின்றது. மேலும் இது குறித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தார். அவரது மனுவில், இந்த 10 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தனக்கு ஈடுபாடு இல்லை என்றும், அபராதத்தை தான் கட்டும் நிலையில் இல்லை என்றும், தனக்கு விதித்த ஒப்பந்த நிபந்தனையை உடனடியாக ரத்து செய்து தன்னை விடுவிக்கக்கோரியுள்ளார்.அவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழக மருத்துவ கவுன்சில் ஒப்பந்த பணியாற்றும் காலத்தை 2 வருடமாக குறைத்ததை சுட்டிக்காட்டினார்.

மேலும் அபராதத்தையும் 50 லட்சமாக குறைத்திருப்பதை மேற்கோளிட்டு பேசினார். இதனால், மருத்துவர் ஸ்ரீஜித் தமிழகத்தில் 2 வருடங்கள் பணிபுரிய வேண்டும், அவ்வாறு பணிபுரிய விரும்பாதபட்சத்தில் ரூபாய் 50 லட்சத்தை தமிழக அரசுக்கு அபராதமாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் இந்த ஒப்பந்த பணி குறித்தும், இழப்பீட்டு அபராதம் குறித்தும் அனைத்து மாநிலங்களிலும் ஒரேமாதிரியான விதியை நிர்ணயம் செய்ய அறிவுறுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கைவிடப்பட்டது.

author avatar
Parthipan K