பூஜை அறையில் தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!!

0
175
#image_title

பூஜை அறையில் தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!!

1)வீட்டு பூஜை அறையில் ஒட்டடை,தூசி,அழுக்கு படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

2)வாரம் ஒருமுறை செவ்வாய்,வெள்ளி தவிர்த்து இதர நாட்களில் பூஜை அறையை சுத்தமான துணி கொண்டு துடைக்க வேண்டும்.பச்சை கற்பூரம்,மஞ்சள் சேர்த்த தண்ணீரில் துடைத்தால் இன்னும் சிறப்பு.

3)பெண்கள் கையில் வளையல்,நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

4)பூஜை அறையில் ஒரு ஊதுவத்தி மற்றும் பற்ற வைத்து வழிபாடு செய்யக் கூடாது.

5)வீட்டில் பூஜை செய்யும் பொழுது கதவு,ஜன்னல் திறந்தவாறு இருக்க வேண்டும்.

6)பூஜை பொருட்களை அவ்வப்போது சுத்தம் செய்து வைக்க வேண்டும்.

7)காய்ந்த மலர்கள்,பழங்கள்,பழைய பொருட்கள் இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

8)குளிக்காமல் பூஜை அறைக்குள் செல்லக் கூடாது.மனதில் அழுக்கு வைத்துக் கொண்டு கடவுளை வணங்கக் கூடாது.பூஜை அறையில் கடவுளுக்கு படைத்த பொருட்களை கொண்டு நெய்வேத்தியம் செய்து கடவுளுக்கு மீண்டும் படைக்க கூடாது.