இன்று ‌இந்த நாளை தவறவிடாதீர்கள்! அஸ்வமேதயாகம் செய்த பலனை பெறலாம்!

0
91

இன்று ‌இந்த நாளை தவறவிடாதீர்கள்! அஸ்வமேதயாகம் செய்த பலனை பெறலாம்!

29.08.2020 இன்று சனிக்கிழமை ஆனது மிகவும் சிறப்பான நாள். வளர்பிறை ஏகாதசி வருகிறது. இந்த நாளில் விரதம் இருந்தால் அஸ்வமேதயாகம் செய்த பலனை பெறலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது.

இந்த விரதத்தில் எப்படி மேற்கொள்வது மற்றும் பலன்களைப் பற்றி இங்கு காண்போம்.

1. இந்த விரதமானது ஏகாதேசி முதல் நாளன்று தசமியில் இருந்தே ஆரம்பித்து விட வேண்டும்.

2. மூன்று நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.

3. தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய மூன்று நாட்களும் விரதம் இருப்பவர்கள் பெருமாளை தவிர வேறு எந்த எண்ணத்தையும் தங்கள் மனதில் போட்டுக் கொள்ளக்கூடாது.

4. ஏகாதசி ஆனது மாதத்திற்கு 2 முறை என வருடத்திற்கு 24 முறை வரும்.

5. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசியின் முந்தைய நாள் தசமியில் ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும்.

6. ஏகாதசி அன்று முழுநாளும் சாப்பிடாமல் பெருமாளை நினைத்து உருகி வழிபட வேண்டும்.

7. ஏகாதசியன்று இரவு முழுவதும் கண்விழித்து பெருமாள் பற்றிய பிரபந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டே அவர் அருளை பெற வழி வகுக்க வேண்டும்.

8. மறுநாள் காலை துவாதசியன்று மஹா விஷ்ணுவின் நாமத்தை கூறி துளசி தீர்த்தத்தை அருந்தி ‌ விரதத்தை முடிக்க வேண்டும்.

9. விரதத்தை முடித்த பின்பு ஏழை எளியவர்களுக்கு உணவு உண்ண கொடுக்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்கள் உணவு அருந்திய பின் நீங்கள் உணவருந்தி விரதத்தை முடிக்க வேண்டும்.

10. இவ்வாறாக வருடத்திற்கு வரும் ஏகாதசியன்று விஷ்ணுவை வணங்கி வந்தால் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும்‌ நோய்கள் அகலும். பகைவர்கள் கூட தேடி வந்து பேசுவார்கள் என சாஸ்திரம் கூறுகிறது.

11. அது மட்டுமல்லாமல் நம் இறப்பிற்குப் பிறகு முக்தி என்ற நிலையை அடைய இந்த விரதம் உதவுகின்றது.

12. இதுபோன்று கண்விழித்து அவரை வணங்கி வந்தால் அவர்தரும் வரங்களுக்கு எல்லையில்லை என கூறுகிறது.

13. இவ்வாறு நீங்கள் ஏகாதசி விரதத்தை முறையாகக் கடைபிடித்து வந்தால் அரசர்கள் செய்யக்கூடிய அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறுவார்கள் என சாஸ்திரம் கூறுகிறது.

எனவே நம்மால் முடிந்தவரை ஏகாதசியில் விரதமிருந்து அவர் பாதத்தை பணிந்து அருள் பெருவோம்.

author avatar
Kowsalya