ஆடிப்பெருக்கை முன்னிட்டு பூக்களின் விலை பலமடங்கு உயர்வு!!

0
34
Due to the increase in the number of flowers, the price of flowers has increased many times!!
Due to the increase in the number of flowers, the price of flowers has increased many times!!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பூக்களின் விலை பலமடங்கு உயர்வு!!

தமிழகத்தில் உள்ள கொங்கு மண்டலங்களில் நாளை ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதை சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கொண்டாடப்பட இருக்கிறது.

மக்களை அனைவரும் காலையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்துவிட்டு அருகே உள்ள கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுவார்கள். அணை இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அணைக்கு சென்று தண்ணீரை பார்த்து மகிழ்வார்கள்.

மேலும், நாளை சுதந்திரத்திற்காக போராட்டம் செய்த கொங்கு மண்டலங்களின் முக்கிய வீரரான தீரன் சின்னமலையின் நினைவு தினம் ஆகும்.இதனால் நாளை சங்ககிரி கோட்டையில் அனைவரும் ஒன்றிணைந்து தீரன் சின்னமலையின் சிலைக்கு மரியாதை செலுத்தி வருவார்கள்.

இவ்வாறு ஏராளமான நிகழ்ச்சிகள் நாளை அரங்கேற உள்ள நிலையில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.

மதுரை, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து மலர் சந்தைகளிலும்  மல்லிகைப்பூ, முல்லை பூ, பிச்சிப்பூ ஆகியவற்றின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

மதுரையில் உள்ள மாட்டுத்தாவனி சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூபாய் 800  என்ற விலையிலும், ஒரு கிலோ முல்லைப்பூ ரூபாய் 600  என்ற விலையிலும், மேலும் ஒரு கிலோ பிச்சிப்பூ ரூபாய் 700  எனவும் விற்கப்பட்டு வருகிறது.

அதைப்போலவே, ஒரு கிலோ கனகாம்பரம் ரூபாய் 500  எனவும், ஒரு கிலோ செண்டு பூ ரூபாய் 100  அணவும், ஒரு கிலோ தக்காளி ரோஸ் ரூபாய் 250  என்ற விலையிலும் விற்கப்படுகிறது.

மேலும், அரளிப்பூ ஒரு கிலோ ரூபாய் 200  எனவும், செவ்வந்தி ரூபாய் 280  எனவும், மரிகொழுந்து ஒரு கிலோ ரூபாய் 100  எனவும், வாடாமல்லி ஒரு கிலோ 100  எனவும், கோழிக்கொண்டை பூ ஒரு கிலோ ரூபாய் 120  எனவும் விற்கப்பட்டு வருகிறது. இதைப்போலவே, ஆண்டிபட்டி சந்தையிலும் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூபாய் 700  என்ற விலையிலும், முல்லை, பிச்சிப்பூ, கனகாம்பரம் ஆகிய மலர்கள் அனைத்தும் ரூபாய் 500 என்ற விலையிலும் விற்கப்படுகிறது.

author avatar
CineDesk