முதல்வரை அவமானப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

0
69

தற்போது இருந்து வரும் அரசியல் சூழ்நிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் திமுக அதிமுக என்ற இரு கட்சிகளுமே வெற்றி பெற்று விட வேண்டும் என்ற நெருக்கடியில் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.அந்த விதத்தில் தமிழகத்தில் பல தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக மாறி இருக்கிறது. கோவில்பட்டி தொகுதிகள் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடுகிறார்.இங்கே அவரை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட இருக்கிறார். அதே நேரம் அவர் முன்னரே சட்டசபை உறுப்பினராக இருக்கக்கூடிய ஆர்கே நகர் தொகுதியில் அவர் பெரிதாக மக்களுக்கு எதுவும் செய்யாத காரணத்தால், அவரை கண்டு கொள்வதற்கு அங்கே யாரும் இல்லை என்ற காரணத்தால், தமிழக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே அவர் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக ஒரு கருத்து நிலவி வருகிறது.

அதேபோல சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் போட்டியிடுகிறார். அந்த தொகுதியை பொறுத்தவரையில் திமுகவிற்கு சேலம் மாவட்டத்தில் அனேக இடங்களில் செல்வாக்கு அதிகம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வீரபாண்டி ஆறுமுகம் போன்ற மிகப் பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இருந்த சேலம் மாவட்டத்தில் இன்றளவும் திமுகவிற்கு அசைக்க முடியாத மாபெரும் ஆதரவு இருக்கிறது.ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து இதுவரையில் திருமணம் கூட ஆகாத ஒரு இளைஞரை திமுக களமிறக்கி இருக்கிறது. ஒருவேளை திமுக இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அந்த கட்சியின் முக்கிய தலைவர்களை வாமனப்படுத்துகிறதா என்ற கருத்தும் நிலவி வருகிறது.

மறுபுறம் முதல்வர் வேட்பாளரை பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் இருந்தால் அவருக்கான போட்டி பெரிய அளவில் இருக்காது என்று கருதி அவரை அவமானப்படுத்தும் விதமாக இந்த புதிய வேட்பாளரை திமுக களமிறக்கி இருக்கிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.அதேவேளையில், எடப்பாடி தொகுதியை பொறுத்தவரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனி செல்வாக்குடன் திகழ்ந்த வருகிறார். ஆகவே அவரை வெற்றி பெறுவது கடினம் என்ற காரணத்தால் அந்த இடத்தில் திமுகவின் முக்கிய தலைவர்களை நிறுத்தி அவர்களை அவமானப்படுத்துவதை விட புதுமுகத்தை இறக்கி தோல்வி கண்டாலும் அது பெரிய அளவில் திமுகவை பாதிக்காது என்பதால் திமுக தலைமை இப்படி ஒரு முடிவை எடுத்ததா என்ற சந்தேகமும் எழ தொடங்கியிருக்கிறது.

இல்லையென்றால் ஒருவேளை திமுக சேலம் மாவட்டத்தில் அந்த கட்சிக்கு இருக்கும் ஆதரவைப் பயன்படுத்தி தற்போது களமிறங்கியிருக்கும் புதுமுக வேட்பாளரை வெற்றிபெற வைத்துவிட்டால் முதல்வரை சாதாரண ஆட்களை வைத்து நான் வெற்றி பெற்று விட்டேன் என்று திமுக தலைமை மார்த்தட்டுவதற்க்காக இவ்வாறு செய்கிறதா என்ற சந்தேகமும் உருவாகியிருக்கிறது.அதேபோல சென்னையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக ஸ்டாலினின் ஒரே மகனான உதயநிதி களமிறங்கி இருக்கிறார். அந்த தொகுதி ஆரம்பகாலம் முதலே திமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் தொகுதி. ஆகவே அந்த தொகுதியில் கருணாநிதியின் பேரன் என்ற முறையில் வாக்கு கேட்டால் நிச்சயமாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் உதயநிதியை களமிறக்கி இருக்கிறது திமுக தலைமை என்ற கருத்து உலாவி வருகிறது.

அதே நேரத்தில் இப்படி முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் இந்த தொகுதியில் அதிமுக நேரடியாகவே களம் இறங்கி ஒரு முக்கிய தலைவரை அங்கே களமிறக்கி அந்த தொகுதியில் வெற்றி பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டு இருக்கலாம்.ஆனால் அதிமுக தலைமையோ அந்த தொகுதியை கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கி இருக்கிறது. அந்த தொகுதியில் பிராமணர்கள் மற்றும் சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் தான் அதிகம். அப்படிப் பார்த்தோமானால் ஒருவேளை பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் நடிகை குஷ்பூ நிச்சயமாக அங்கே போட்டியிட்டு இருப்பார் ஆனால் அதையும் அதிமுக தலைமை செய்யவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சி என்ன தான் சிறுபான்மை இன வேட்பாளரை அந்த தொகுதியில் அறிவித்திருந்தாலும் திமுகவைப் பொறுத்தவரையில் சிறுபான்மையின கட்சிகள் அனைத்தையும் தன்னுடைய கூட்டணிக்குள் வைத்துக்கொண்டு அந்த போர்வையில் திமுக குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அந்த தொகுதியில் திமுக மிக எளிதாக வென்று விடலாம் என்று கணக்குப் போட்டுத்தான் உதயநிதி அந்த தொகுதியில் களம் இறங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.

ஆகவே தற்போது இந்த இரண்டு தொகுதிகளுமே தமிழக அளவில் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயம் தமிழக மக்கள் அனைவராலும் இந்த இரண்டு தொகுதிகளும் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. எனவே எதிர்வரும் தேர்தலில் இந்த தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதுதான் இந்த தேர்தலில் மிகப் பெரிய மாற்றமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.