திடீர் திருப்புமுனை ஓங்கி அடிக்கும் எடப்பாடி அலை! காணாமல் போகும் திமுக!

0
127

தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து அதிமுக தமிழகம் முழுவதிலும் பம்பரமாக சுழன்று தேர்தலுக்கான வேலைகளை பார்த்து வருகிறது. அதோடு தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.அதோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த ஊக்கத்தின் பெயரில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அதிமுகவின் முக்கிய புள்ளிகள் அனைவரும் மற்றும் அதிமுகவை சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் அமைச்சர்கள் என்று எல்லோருமே தமிழகம் முழுக்க போட்டிபோட்டுக்கொண்டு தேர்தல் வேலைகளில் மிக ஜரூராக இறங்கி விட்டார்களாம். இந்த முறை எப்படியேனும் ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பதே தற்போது ஒட்டுமொத்த அதிமுகவின் மன எண்ணமாக இருந்து வருகிறதாம்.

அதோடு அந்த கட்சியினரின் இது போன்ற பரபரப்பான செயல்பாடு, மக்களிடையே அவர்கள் காட்டும் ஆர்வம் எடப்பாடி பழனிசாமியின் தீவிரமான செயல்பாடு அவருடைய பிரச்சாரம் இதுபோன்ற எல்லாம் சேர்ந்து தமிழக மக்களிடையே அதிமுகவிற்கு மிகப்பெரிய வரவேற்பு உண்டாகி இருப்பதாக சொல்கிறார்கள்.இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகாலமாக ஆட்சியை பிடிக்க முடியாமல் தவித்து வரும் திமுக தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து அடுத்து நாங்க தான் என்ற மிதப்பில் தெரிவதாக சொல்கிறார்கள்.

சுமார் பத்தாண்டு காலமாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் இந்த பத்து வருட காலத்தில் அதிமுக ஆட்சி செய்திருக்கிறது அப்படி செய்திருக்கும் காரணத்தால் தமிழக மக்களிடையே அதிமுக மீது அதிருப்தி இருக்கும் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு கட்டிய திமுக அடுத்தது நாங்கள் தான் என்று வெகு விரைவாக தெரிந்து கொண்டு இருக்கிறதாம்.

பத்து வருட காலமாக ஆட்சியில் இருந்தாலும் அதிமுக பெரிய அளவில் மக்களிடையே அதிருப்த்தியை சம்பாதிக்கவில்லை என்று பரவலாக பேசப்படுகிறது. இதையெல்லாம் அறிந்து கொள்ளாத திமுக ஏதும் அறியாத குழந்தை போல அதிமுக அரசு ஊழல் செய்து விட்டது அதை நாங்கள் களைய போகிறோம் அமைச்சர்கள் ஊழல் செய்து இருக்கிறார்கள். அவர்களை உள்ளே வைக்கப் போகிறோம் என்பது போன்ற பிரச்சாரத்தை தூக்கிக் கொண்டு தமிழகத்தில் தெருத்தெருவாக உலா வந்து கொண்டு இருக்கிறது.

திமுகவின் தானென்ற ஆணவத்தை அதிமுக தற்போது தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இருப்பதாக சொல்கிறார்கள். திமுக எந்த அளவிற்கு தமிழகத்திலேயே அந்தந்த தொகுதிகளிலும் அலட்சியம் காட்டுகிறதோ அதே அளவிற்கு அதிமுக அந்தந்த தொகுதிகளிலும் வேகமாக செயல்பட்டு கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் அதிமுக என்ற மிகப்பெரிய கழகத்தை தன் கண் அசைவில் வைத்திருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாத நிலையில், இந்த தேர்தல் அதிமுகவிற்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதோடு ஒரு வேளை இந்த தேர்தலில் தோல்வியடைந்துவிட்டால் அதிமுக இனி எழுந்து நிற்கவே முடியாது என்ற சூழ்நிலை உருவாகிவிடும். அதனை மனதில் வைத்துதான் முதல்வர் உட்பட அதிமுகவை சேர்ந்த எல்லோரும் மிகத்தீவிரமாக தமிழகம் முழுவதும் பணியாற்றி வருகிறார்கள்.ஆனால் திமுகவோ கருணாநிதி என்ற மிகப்பெரிய ஆளுமை இல்லை என்ற கவலையே இல்லாமல் மேம்போக்காக செயல்பட்டு வருவதாக சொல்கிறார்கள் காரணம் அவர்கள் ஸ்டாலின் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் அந்த கட்சியை சார்ந்தவர்கள் ஸ்டாலின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தமிழக மக்கள் வைத்திருக்கிறார்களா என்று பார்த்தோமானால் இல்லை என்ற பதிலே மூலைமுடுக்கெல்லாம் தென்படுகிறது.என்னதான் ஜெயலலிதா தற்போது இல்லாவிட்டாலும் அவர் இடத்திலிருந்து அனைத்தையும் செய்து வருபவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்த வகையில், அவர் செய்த பல திட்டங்கள் அம்மாவைப் போலவே இவரும் இருக்கின்றார் என்ற ஒரு தோற்றத்தை தமிழக மக்களிடையே உருவாக்கி இருக்கிறது.தமிழக மக்களிடையே உருவாகியிருக்கும் இந்த தோற்றம்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக மக்களிடையே மிகப்பெரிய ஆதரவாக மாறி இருக்கிறது.

சென்றமுறை நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் கூட திமுக இதேபோன்று தான் என்ற அகங்காரத்துடன் செயல்பட்டதன் காரணமாக தான் சொற்ப தொகுதிகள் வித்தியாசத்தில் வெற்றியை அதிமுகவிடம் பறிகொடுத்தது ஆனால் தற்போதும் கூட அது இந்த தவறை திமுக புரிந்துகொள்ளவில்லை என்று சொல்கிறார்கள் ஆகவே எதிர்வரும் தேர்தலிலும் அதிமுக ஆட்சிக்கு வரப்போகிறது தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர போகிறார். என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக சொல்கிறார்கள்.