எடப்பாடியாரின் அடுத்த திட்டம்? இத்தனை சீட்களை ஒதுக்க முடிவு? அப்போ மெகா கூட்டணி கன்பார்ம்!!

0
86
#image_title

எடப்பாடியாரின் அடுத்த திட்டம்? இத்தனை சீட்களை ஒதுக்க முடிவு? அப்போ மெகா கூட்டணி கன்பார்ம்!!

முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக அரசியலில் பல அதிரடி திருப்பங்களை காட்டி வருகிறார்.பாஜக உடனான கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சர்ச்சை பேச்சால் மேலிட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி போட்டு தேர்தலை சந்தித்தது.தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு அலை வீசத் தொடங்கிய காலக்கட்டம் அது.இதனால் அதிமுகவின் ஓட்டு வங்கி சற்று சரிந்தது.சிறுபான்மையினர் ஓட்டு திமுக பக்கம் சென்றது.

பாஜக உடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக தேர்தலில் தோல்வியை சந்தித்தது என்ற விமர்சனம் எடப்பாடியரை தொடர்ந்து கொண்டே இருந்தது.இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக மீண்டும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதாக எடப்பாடியர் தெரிவித்ததால் அதிமுக வாக்கு வங்கி மீண்டும் சரிவை நோக்கி செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று கருத்து பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதவை குறித்து அவதூறு கருத்து தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழித்தினார்.

அதிமுக என்ற கட்சி உருவாக காரணமாக இருந்தவர் அறிஞர் அண்ணா.அதேபோல் அதிமுகவை சிறப்பாக வழி நடத்தி சென்றவர் ஜெயலலிதா.அப்படி இருக்கையில் அவர்களை பற்றி அவதூறாக பேசியதால் அண்ணாமலையை கூட்டணி கட்சியை சேர்ந்தவர் என்றும் பாராமல் அதிமுக நிர்வாகிகள் கடுமையாக தாக்கி பேசினார்.இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தைப் போர் மூண்டது.இந்த வார்த்தை மோதல் கூட்டணி முறையும் நிலைக்கு கொண்டு போய் நிறுத்தியது.

அண்ணாமலையின் பேச்சு,இரு கட்சிகளிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு,தொகுதி பங்கீடு காரணமாக பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

பாஜக உடனான கூட்டணி முறிவுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அதிரடிகளை காட்டி வருகிறார்.பாஜக உடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுகவுக்கான சிறுபான்மையினர் ஓட்டு திமுக பக்கம் சென்றது.

இந்நிலையில் மீண்டும் அதிமுக வாக்கு வங்கியை பலப்படுத்த எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.சமீபத்தில் நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சட்டமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் முக்கிய தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

இவரின் இந்த நடவடிக்கைக்கு இஸ்லாமியர்கள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து எடப்பாடியாரை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தான் ஆதரவு தர உள்ளதாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர்.இதனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினரின் ஒட்டு அதிமுகக்கு கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதென்ற தகவலை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக உடனான கூட்டணி முறிவு உறுதிபடுத்தப்பட்டு விட்டதால் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்க எடப்பாடியார் மாபெரும் திட்டத்தை தீட்டி வருவதாக சொல்லப்படுகிறது.அதிமுகவுடன் ஏற்கனவே கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளான பாமக,தேமுதிக உடன் பேச்சு வார்த்தை நடத்திவருகிறார்.அதேபோல் விசிக கட்சி தலைவர் தொல் திருமாவளவனிடமும் ரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.இதனால் திமுக தலைவர் மற்றும் நிர்வாகிகள் பீதியில் இருக்கின்றனர் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்றால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக நாங்கள் ஏற்று கொள்கிறோம் என்று ஊடங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டும் என்று திமுகவானது அதன் கூட்டணி கட்சிகளை வலியுறுத்தி வருகிறது.அதேபோல் திமுக தலைமை எந்த தொகுதியை ஒதுக்குகிறதோ அதில் தான் கூட்டணி கட்சிகள் நிற்க வேண்டுமென்ற பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிறது.இதனால் திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் அதிமுக பக்கம் வர இருப்பதாக சொல்லப்படுகிறது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் எடப்பாடியர் பாஜக எதிர்ப்பு அமைப்புகள்,பாமக,தேமுதிக, விசிக,சிறுபான்மையின அமைப்பு,இஸ்லாமிய கட்சிகளை வைத்து அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்க திட்டம் வகுத்து வருகிறார்.கடந்த சட்டமன்ற,நாடாளுமன்ற தேர்தல் போல் அல்லாமல் இந்த முறை வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி மீண்டும் உயர அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.