தமிழ்நாட்டில் அரசு, சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கட்டணம் அதிரடியாக உயர்வு

0
71
Education fee hike in Tamil Nadu!! For courses like MPBS, BDS!!
Education fee hike in Tamil Nadu!! For courses like MPBS, BDS!!

தமிழகத்தில் கல்வி கட்டண உயர்வு!! எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்புகளுக்கு!!

தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு அரசு மற்றும் சுயநிதி  கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்பிற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இப்பொழுது எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்புகளுக்கு நீட் என்னும் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்புகளை படிக்க முடியும்.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தாங்கள் விரும்பும் அரசு கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள். மற்றவர்கள் மதிப்பெண் அடிப்படையில் இடம் பெறுகின்றனர்.

அதில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 37 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளது. கொடுக்கப்பட்ட இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய மாணவர்களுக்காக ஒதுக்கப்படுகின்றது.பின்னர் மீதம் உள்ள இடங்களில் மாநிலத்தை சேர்ந்த மாணவர்களை வைத்து நிரப்பி கொள்கின்றனர்.

இதேபோன்று தமிழகத்தில் 20 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளது. இதில்  7.5 சதவீதம் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

மேலும் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகின்றது.இதற்கு இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பிக்கும் நாள் கடந்த மாதம் 28 ம் தேதி தொடங்கியது.

இந்த கலந்தாய்வு நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில் எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற மருத்தவ படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி  அரசு மருத்தவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்  படிப்பிற்கான கல்வி கட்டணம் ரூ.18 ஆயிரத்து 73 ம் மற்றும் பி.டி.எஸ் பட்டிபிற்கான கல்வி கட்டணம் ரூ16 ஆயிரத்து 73 ம் என்று கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த கட்டணத்தின் உயர்வு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்து உள்ளது.

author avatar
Parthipan K