கல்வி வள்ளல் செங்கல்வராய நாயக்கர்: 195 ஆம் ஆண்டு பிறந்த தினம்

0
307
Chengalvaraya Naicker - News4 Tamil Online Tamil News
#image_title

கல்வி வள்ளல் செங்கல்வராய நாயக்கர்: 195 ஆம் ஆண்டு பிறந்த தினம்

Chengalvaraya Naicker (பி. டி. லீ. செங்கல்வராய நாயக்கர்):

பி. டி. லீ. செங்கல்வராய நாயக்கர் (Chengalvaraya Naicker) (1825-1874) 19 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் வாழ்ந்த ஒரு கல்வி வள்ளலாவார் . இவர் காஞ்சிபுரத்தை அடுத்த ஊவேரி என்னும் சிற்றூரில் வளர்ந்தவர்.

இவர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சென்னையில் இயங்கிய அவர்களின் புகழ் பெற்ற வர்த்தக நிறுவனமான ஷண்ட் அன் கோ என்னும் கம்பெனியில் சுமார் 74 ஆயிரத்து 200 ரூபாய் வரை முதலீடு செய்து பங்குதாரரானார்.இந்த நிறுவனமானது  அப்போது இந்தியாவிலிருந்து தோல், பருத்தி, மஞ்சள், எட்டிக் கொட்டை, மருந்துப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் கொள்முதல் செய்து, இங்கிலாந்துக்கும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தது.

அந்த நிறுவனத்தில் பங்குதாரராகச் சேர்த்ததோடு, பெரும் தொகையை சம்பளமாகக் கொடுத்து நாயக்கரை தனது நிறுவனத்தின் துபாஷியாகவும் ஷண்ட் அன் கோ நிறுவனம் நியமனம் செய்து கொண்டது. பின்னர் சென்னை இராணுவத்தில் துபாசியாகப் (மொழிபெயர்ப்பாளர்) பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தன் சொந்த சம்பாத்தியத்தில் சேர்த்த சொத்துகள் மூலம் ஏழைகள், அனாதைக் குழந்தைகள் பயன் பெறும் வகையில் அப்போதே பல சமுதாய சேவைகளைச் செய்தவராவார். அந்த வகையில் தனக்கு பிறகு தன்னுடைய சொத்துக்கள் அனைத்தும் ஏழை வன்னிய மக்களுக்கு பயன்பெறும் வகையில் அறக்கட்டளையை உருவாக்கி உயில் எழுதியுள்ளார்.அந்த வகையில் செங்கல்வராய நாயக்கர் 1886 இல் ஆரம்பித்த டிரஸ்ட் பல்வேறு  கல்வி சேவைகளைப் புரிந்து வருகிறது.

செங்கல்வ நாயக்கர் தனது சொத்துக்கள் அனைத்தையும் உயில் மூலம் எழுதி உருவாக்கிய அறக்கட்டளை கல்விக்காக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் வள்ளல் பி. டி. லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை, வேப்பேரி,சென்னை-7 என்ற முகவரியில் கடந்த 145 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

இவ்வறக்கட்டளை மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களான, மருத்துவம், தொழிற்கல்வி, பொறியியற்கல்வி போன்ற கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அதில் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அறப்பணிகள்:

செங்கல்வ நாயக்கர் நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின்போது பாதிக்கப்பட்ட ஒரிசா மக்களுக்குத் தனி ஒரு ஆளாக நின்று பல இலட்சம் மதிப்புள்ள உதவிப்பொருட்களை தன் சொந்தச் செலவில் அனுப்பினார். மேலும் அவர் இது போன்ற பல்வேறு அறப்பணிகளைச் செய்துள்ளார்.

#image_title

1829 இல் பிறந்த இவர் 1874 இல் காலமானார்.சென்னை ராஜாஜி சாலையில் மெட்ரோபாலிடன் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் அருகே செங்கல்வராய நாயக்கர் சிலை உள்ளது. மார்பளவுக்கான இந்த வெங்கல சிலையை பிப்ரவரி 23, 2006 அன்று நீதியரசர் கே எம் நடராஜன் திறந்து வைத்தார்.

கல்வியே அழியா செல்வம் ‘என்று தனது பல்லாயிரங்கோடி சொத்துகளை கல்விக்காக கொடை அளித்து பல லட்சம் பேர் அறிவு கண் பெற காரணமாக இருந்த கல்வி வள்ளல் ‘பி .டி.லீ .செங்கல்வராய நாயக்கர் ‘ அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது புகழை நினைவு கூர்ந்து வணங்குவோம்.