பிரதமர் மோடி பாராட்டியது பெருமையாக உள்ளது! பாகன் தம்பதியினர் பெருமிதம்!!

0
135
#image_title

பிரதமர் மோடி பாராட்டியது பெருமையாக உள்ளது! பாகன் தம்பதியினர் பெருமிதம்!!

பாரத பிரதமர் மோடி தமிழகத்தில் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த அவர் முதல் நாள் நிகழ்சிகளை முடித்துக்கொண்டு மீண்டும் மறுநாள் காலை பந்திப்பூர் புலிகள் சரணாலயம் மற்றும் முதுமலை யானைகள் காப்பகத்திற்கு சென்று பார்வையிட்டார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முதுமலை யானைகள் காப்பகத்திற்கு சென்ற பிரதமர் அங்கு சமீபத்தில் ஆஸ்கார் விருதினை வென்ற பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளியை சந்தித்து மகிழ்ச்சியுடன் உரையாடினார்.இது குறித்து தெரிவித்த யானை தம்பதியினர் இதுவரை டிவியில் மட்டுமே பார்த்து வந்த நாட்டின் பிரதமரை முதன் முதலாக நேரில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும், மேலும் அவர் எங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டார் ஆனால் நாங்கள் அவரிடம் எங்களுக்கு என்று எதுவும் வேண்டாம். எங்கள் பகுதியில் சாலை வசதி, பள்ளிக்கூடத்தில் கணினி வசதி, பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை வேண்டும் என பிரதமரிடம் கேட்டதாக கூறினார்.

பொம்மன் பெள்ளி கூறியதை கூர்ந்து கவனித்த பிரதமர் மோடி, நீங்கள் கேட்ட அனைத்தையும் கலெக்டர் செய்து தருவார் அப்படி இல்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள் நான் நிறைவேற்றி தருகிறேன்.

உங்களிடம் வெகு நேரம் பேச வேண்டும் என்று ஆசையாக உள்ளது ஆனால் எனக்கு இன்னும் நிறைய நிகழ்ச்சிகள் உள்ளதால் உடனே செல்ல வேண்டிய நிலையில் உள்ளேன்.எனவே தாங்கள் இருவரும் கண்டிப்பாக டெல்லி வந்து என்னை சந்திக்க வேண்டும் என பிரதமர் மோடி அவர்களிடம் கூறினார்.

பிரதமர் தங்களுடன் இவ்வாறு பேசியதையும், புகைப்படம் எடுத்து கொண்டதையும் மிகப் பெருமையாகவும் அதே சமயத்தில் சந்தோசமாகவும் உள்ளதாக பொம்மன் பெள்ளி தம்பதியினர் கூறினர்.