300 நாட்களே கடந்தும் தியேட்டரை ஹவுஸ் புல்லாக்கிய சூப்பர் ஹிட் மூவிஸ்!!

0
60

300 நாட்களே கடந்தும் தியேட்டரை ஹவுஸ் புல்லாக்கிய சூப்பர் ஹிட் மூவிஸ்!!

பெரும்பாலும் சினிமா என்றால் அக்காலத்தில் மக்களிடையே நல்ல வருகை பெற்ற ஒன்றாகும். இப்பொழுது வருவது போல் வாரத்திற்கு ஒருமுறை எல்லாம் படங்கள் வெளியாகாது. ஏதேனும் ஒரு திரைப்படம் நன்றாக இருந்தால் இந்த நடிகர் மீண்டும் அடுத்த படம் எப்போது நடிப்பார்,என்ற அளவிற்கு,ஆவலை தூண்டக்கூடிய ஒன்றாகத் திகழ்ந்தது.

அவ்வாறே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ,வசூல் ரீதியிலும் சாதனையைப் படைத்த திரைப்படங்களின் வரிசை தொகுப்புகளை காண்போம்.

பருத்தி வீரன்:

“பருத்தி வீரன்“திரைப்படமானது, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.2007ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.இப்படத்தின் இயக்குநர் அமீர் ஆவார்.இந்த திரைப்படமானது கிட்டத்தட்ட 375 நாட்கள் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிய சாதனையைப் படைத்துள்ளது. இப்படமானது இந்த தரவரிசை பட்டியல்களில் 10 ஆவது இடத்தில் உள்ளது. கார்த்திக் இப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானாலும் இது அவரை முதல் படம் போலவே இருக்காது. ஏனென்றால் அவருடைய நடிப்பு அவ்வளவு தத்ரூபமாக இருக்கும்.

சின்னதம்பி:

சின்ன தம்பி திரைப்படமானது 1991ஆம் ஆண்டு வெளியானது.இப்படத்தில் நடிகர் பிரபு அவர்கள் வெகுளித்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் இவருக்கு ஜோடியாக குஷ்பு அவர்கள் இணைந்து நடித்திருப்பார்.இந்த திரைப்படமானது 385 நாட்கள் வெற்றிகரமாய் திரையரங்குகளில் ஓடி அசத்தியது.

பாட்ஷா:

பாட்ஷா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து அசத்தியிருப்பார். இந்த திரைப்படமானது ரஜினிகாந்த்தை “டான் “ போன்ற வேடத்தில் காட்டி இருப்பர்..இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா ஆவார். இப்படமானது 380 முதல் 400 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனைப் படைத்தது.

பயணங்கள் முடிவதில்லை :

பயணங்கள் முடிவதில்லை என்ற திரைப்படமானது,1982 ஆம் ஆண்டு வெளியானது. இயக்குநரும்,நடிகருமான ஆர்.சுந்தராஜன் அவர்கள் இப்படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தில் மோகன் பூர்ணிமா எனப் பல திரைப்பட பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இப்படமானது காதல் சம்மந்த பட்ட படமாக அமைந்ததையடுத்து, இளையராஜா அவர்களின் இசை இப்படத்திற்கு,மற்றொரு பலமாக இருந்தது. இப்படமானது 370 முதல் 400 நாட்கள் வரை சிறப்பாகவே ஓடி சாதனை படைத்துள்ளது

கரகாட்டக்காரன்:

கரகாட்டக்காரன் திரைப்படமானது,1989 ஆம் ஆண்டு வெளியானது.இந்த திரைப்படத்தில், ராமராஜன்,கனகா,கவுண்டமணி,செந்தில், எனப் பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். அதிலும் கவுண்டமணி செந்தில் அவர்களது நகைச்சுவையானது இன்று வரை மக்களால் ரசித்து பார்க்கப்படும் ஒன்றாகும். இப்படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பார்.இந்த படமும் 1ஆண்டிற்கு மேல் ஓடி நல்ல வசூல் சாதனையை பெற்றுள்ளது.1989ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக நாட்கள் ஓடின திரைப்படம் எனப் பெருமையையும் பெற்றது.

கிழக்கே போகும் ரயில்:

கிழக்கே போகும் இரயில் இந்த திரைப்படமானது 1978 யில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமாக திகழ்கிறது. இந்த படத்தை பாரதிராஜா அவர்கள் இயக்கி இருப்பர். இந்த படமானது நல்ல கதைகலத்துடம் இருந்ததால் மக்கள் அதிகளவு விரும்பி பார்த்தனர். 400 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடியது.

நெஞ்சத்தை கிள்ளாதே:

நெஞ்சத்தைகிள்ளாதே என்னும் திரைப்படம் 1980 யில் வெளியான திரைப்படம்.இப்படத்தின் இயக்குநர் மகேந்திரன் ஆவார்.இந்த படத்திற்கும் இளையராஜா அவர்கள் இசையமைத்தார். இப்படத்தில் பிரதாப்,மோகன்,சரத்பாபு,சுபாஷினி ஆகியோர் நடித்து அசத்தி இருப்பார்கள்.இந்த திரைப்படமும் 52வாரங்கள் அதாவது 400 நாட்கள் நிறைவடைந்த ஒரு திரைப்படம்.

விதி

விதி திரைப்படமானது 1980யில் வெளியான ஒரு திரைப்படம்.இந்த திரைப்படத்தில் நடிகர் மோகன் அவர்கள் நடித்திருப்பார். இப்படமானது பெரும்பாலும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு சாதனை படமாகத் திகழ்கிறது. இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்திருப்பார்.

நடிகர் மோகன் நடித்த திரைப்படம் என்றாலே அது கிட்டத் தட்ட100 நாட்களைக் கடந்துவிடும் என்பது உண்மை. அவ்வாறே இந்த திரைப்படமானது 500 நாட்களைக் கடந்து வெகு சிறப்பாக ஓடியது.

சந்திரமுகி:

சந்திரமுகி திரைப்படமானது இயக்குநர் வாசு அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள்,பிரபு மற்றும் நயன்தாரா,ஜோதிகா போன்ற முன்னணி பிரபலங்களை வைத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். காதலனை கண் முன்னே கொன்ற ராஜாவை பழிவாங்கும் ஆவியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். கிட்டத்தட்ட 900 நாட்டைகள் மிகச் சிறப்பாக ஓடிய திரைப்படம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது.

author avatar
CineDesk