நீட் தேர்வில் “ஜீரோ” மதிப்பெண் எடுத்தாலும்.. மருத்துவ படிப்பில் சேர முடியும் – மருத்துவ கலந்தாய்வு குழு அதிரடி!!

0
107
#image_title

நீட் தேர்வில் “ஜீரோ” மதிப்பெண் எடுத்தாலும்.. மருத்துவ படிப்பில் சேர முடியும் – மருத்துவ கலந்தாய்வு குழு அதிரடி!!

இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ‘நீட்’ என்ற நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.மாணவர்கள் இதில் எடுக்கும் கட் ஆப் பொறுத்தே மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியும்.இளங்கலை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு நடத்துவது போல் முதுகலை மருத்துவ படிப்பிற்கும் நீட் நுழைவு தேர்வு அவசியமாகும்.இதில் தேர்ச்சி பெற்றால் தான் தரமான மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பயில முடியும்.

இந்நிலையில் முதுகலை மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வு எழுதியவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்திருந்தாலும் மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பம் செய்ய முடியும் என்று மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு செய்தி வெளியிட்டுள்ளது.நீட் தேர்வில் கட் ஆப் அடிப்படையில் முதல் 2 சுற்றுக்கான கலந்தாய்வு நடைபெற்ற நிலையில் பல தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதுகலை படிப்பிற்கான சீட்கள் காலியாக இருக்கிறது.இந்நிலையில் இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு நீட் முதுகலை தகுதி மதிப்பெண் ஜீரோவாக குறைத்து முதுநிலை கலந்தாய்வுக்கான 3வது சுற்று அட்டவணை விரைவில் மருத்துவ கலந்தாய்வு குழு வலைத்தளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.இந்நிலையில் நீட் மதிப்பெண் குறித்த மருத்துவ கலந்தாய்வு குழுவின் முடிவிற்கு நாடு முழுவதும் வரவேற்பும்,எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.

மருத்துவ மாணவ சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஜீரோ மதிப்பெண் அறிவிப்பு எதிர்காலத்தில் மருத்துவ துறையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.யார் வேண்டுமானாலும் மருத்துவராகி விட முடியும் என்றால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நிலை என்னவாகும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அதே வேளையில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர 40 முதல் 50 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.எனவே மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தனியார் கல்லுரிங்களுக்கு மத்திய அரசு முறையான கட்டணம் குறித்த விவரத்தை வெளியிட வேண்டுமென்று மாணவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.