அதிமுக – பாஜக கூட்டணி முறிவு? முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை!!

0
180
#image_title

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு? முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை!!

தமிழகத்தின் ஹாட் டாபிக்காக இருப்பது அதிமுக – பாஜக கூட்டணி முறிந்து விட்டது என்பது தான்.காரணம் கடந்த சில தினங்களாக தமிழக பாஜக மற்றும் அதிமுகவினரிடையே கருத்து மோதல்கள் வலுத்து வந்தது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.கடந்த 1956 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ் சங்க விழாவில் சனாதம் குறித்து பேசினார்.அதற்கு கடும் கண்டம் தெரிவித்து கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கடவுளை நம்பக் கூடியவர்களிடம் தவறாக பேசினால் மதுரை மீனாட்சி அம்மனுக்கு பாலுக்கு பதில் ரத்தத்தில் அபிஷேகம் நடத்தப்படும் என்று முத்துராமலிங்க தேவர் தெரிவித்தார்.இதனால் ஓடி வந்து முத்துராமலிங்க தேவரிடம் அறிஞர் அண்ணா மன்னிப்பு கேட்டார் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

இதனால் கொந்தளித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், செல்லூர் ராஜு,வேலுமணி ஆகியோர் இதற்கு கடும் கண்டனத்தை தெறிவித்தனர்.அறிஞர் அண்ணா குறித்து பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை.அண்ணா அவர்கள் அனைத்து மதங்களும் சமம் என்ற கோட்பாட்டை கொண்டவராக இருந்தார்.வரலாற்றில் நடந்ததாக சொல்லப்படும் நிகழ்வு ஆதாரமற்றது.அரசியல் ஆதாயத்திற்காக எங்கள் தலைவரை அவமதிக்க கூடாது என்று தெரிவித்தனர்.அண்ணாமலை அறிஞர் அண்ணாவை பற்றி இழிவாக பேசியதால் கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக செய்தி தொடர்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.அதே சமயம் இந்த கூட்டணி முறிவு தற்காலிகமானது தான்.தேர்தல் சமயத்தில் பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.இதனால் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்து விட்டது.இனி ஒன்று சேர வாய்ப்பில்லை என்று செய்திகள் வெளியாகின.

இதனை தொடர்ந்து பாஜக குறித்தோ,அண்ணாமலை குறித்தோ விமர்சனம் செய்ய கூடாது என்றும் பொது வெளிகளில் பேசும் பொழுது கவனமாக இருக்க வேண்டுமென்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியது.இந்நிலையில் பாஜக மற்றும் அதிமுகவுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை.தனிப்பட்ட முறையில் எனக்கும் அதிமுகவுக்கும் எந்த மோதலும் இல்லை என்று அதிமுக – பாஜக வார்த்தை மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.

கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுகவுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கோட்பாடு இருக்கும்.அதேபோல் தான் அதிமுக – பாஜக.எங்கள் கருத்தை ஒரே மாதிரியாக பார்க்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது.கூட்டணி காட்சிகளுக்கு இடையே கருத்து முரண்பாடு இருக்க தான் செய்யும்.அதிமுகவை பொறுத்தவரை மத்தியில் பாஜக ஆட்சியமைத்து மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.அதை நான் வரவேற்கிறேன்.அதே போல் தமிழகத்தில் அதிமுக ஆட்சியமைத்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.அது பற்றி தான் கருத்து கூற முடியாது.ஏதுவாக இருந்தாலும் பாஜக மேலிடம் சொல்வது தான் என்று தெரிவித்தார்.

மேலும் அரசியல் ரீதியாக கருத்து தெரிவிப்பதை பர்சனலாக எடுத்து கொள்ளமாட்டேன்.அவரவர் ஒரு நிலைப்பாட்டில் இருப்பார்கள்.அதிமுகவினர் அவர்களது கட்சி குறித்த கோட்பாடு குறித்து பேசிக்கிறார்கள்.இதனால் தான் எதையும் பர்சனலாக எடுத்து கொள்ளமாட்டேன்.நாளை அதிமுக நிர்வாகிகளை பார்த்தால் கூட அதே மரியாதையோடு தான் பேசுவேன் என்று தெரிவித்தார்.

மேலும் அண்ணா குறித்து தான் பேசியதை அனைவரும் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர்.தான் அவதூறு கருத்துக்களை தெரிவிக்க வில்லை.வரலாற்றில் இருபத்தை தான் சொல்கிறேன்.வரலாற்றில் நடந்த ஒன்றை சொல்லியிருக்கும் பொழுது எப்படி மன்னிப்பு கேட்க முடியும்.அறிஞர் அண்ணா சிறந்த தலைவர் தான்.அதில் மாற்று கருத்து இல்லை.திராவிட கொள்கையில் குடும்ப அரசியல் வேண்டாம் என்று சொன்ன மாமனிதர்.சுத்தமான அரசியலை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டுமென்று நினைத்தார்.தான் அவரை பற்றி தவறாக பேசிவிட்டேன் என்று நினைத்து அண்ணா துறைக்கு ஆதராவாக இருக்கும் நபர்கள் ஏன் அண்ணாவின் வழிப்படி நடந்து கொள்ளவில்லை.தமிழகத்திற்கு மது தொழிற்சாலை வேண்டாமென்று உறுதியாக இருந்தவர் அண்ணா.ஆனால் அண்ணாவின் கோட்பாட்டிற்கு மாறாக 1980ல் தமிழகத்திற்கு மது தொழிற்சாலையை கொண்டு வந்தது பெண்களின் வாழ்க்கையை கேள்விகுறியாக்கியது திமுக தான் என்று நேரடியாகவே சாடினார்.

இதனிடையே செல்லூர் ராஜு அவர்கள் மதுரையில் அளித்த பேட்டியில் தங்களுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.அண்ணா குறித்த அண்ணாமலை அவர்களின் கருத்தை தான் எதிர்க்கிறோம் என்று பேசினார்.அண்ணாமலை மற்றும் அதிமுகவின் தற்போதைய கருத்தை பார்க்கும் பொழுது அதிமுக – பாஜக கூட்டணியில் சமரசம் ஏற்பட்டு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.