கல்லூரிகளில் கட்டிய கட்டணத்தை திரும்ப பெறலாம்!! இதோ முழு விவரம்!!

0
211
#image_title

கல்லூரிகளில் கட்டிய கட்டணத்தை திரும்ப பெறலாம்!! இதோ முழு விவரம்!!

நீங்கள் கல்லூரியில் தெரியாமல் சான்றிதழ் மற்றும் கட்டணத்தை செலுத்தி விட்டீர்களா அதை திரும்ப பெறுவதற்கான முறையை விவரிக்கலாம்.

நீங்கள் ஒரு கல்லூரியில் சேர விரும்பினால் முதலில் அந்த கல்லூரியின் ரேங்கிங் மதிப்பை தெரிந்து கொள்ள வேண்டும்.

 

தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியோ மற்றும் இன்ஜினியரிங் கல்லூரியோ அனைத்தும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு கீழ்தான் இயங்கும்.

 

அதே பிரிவின் கீழ் சில அட்டானமஸ் கல்லூரிகளும் வரும். இதற்கு எப்படி இந்த தகுதி கொடுக்கப்படுகிறது என்றால் அந்த கல்லூரியின் வசதியும், ப்ளேஸ்மெண்டும்,

நிர்வாகமும் எப்படி நடக்கிறது என்பதை கருத்தில் கொண்டு யுஜிசி இந்த தகுதியை கொடுக்கும்.

 

அது மட்டுமல்லாமல் ஒரு கல்லூரிக்கு NAAC அங்கீகாரம் என்பது தேசிய அளவில் கொடுக்கப்படும் ஒன்றாகும்.

 

அதன் அடுத்தபடியாக NBA அதிகாரம் என்பது ஒரு டிபார்ட்மெண்டிற்கு மட்டும் கொடுக்கப்படக்கூடிய அதிகாரமாகும்.

 

நீங்கள் ஒரு கல்லூரியில் சேருகிறீர்கள் என்றால் அந்தக் கல்லூரி NAAC அங்கீகாரம் பெற்றுள்ளதா NBA அதிகாரம் பெற்றுள்ளது அவ்வாறு பெற்று இருந்தால் அது என்ன கிரேடில் இருக்கிறது A+ அல்லது A++ என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

 

பின்பு அந்த கல்லூரி தரவரிசை பட்டியலில் எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

 

இதனை ஆண்டுதோறும் NIRF குழுவினர் கல்லூரியின் தரவரிசை பட்டியலை வெளியிடுவார்கள்.

 

நீங்கள் எந்த கல்லூரியில் சேர்கிறீர்களோ அந்தக் கல்லூரியி எந்த ரேங்கில் இருக்கிறது என்பதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இதனை அறியாமல் கல்லூரியில் சேர்ந்து சான்றிதழையும் கட்டணத்தையும் கொடுத்து விட்டால் அதனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

 

கல்லூரியில் பொய்யான தகவல்களை கூறி மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டால் அந்த கல்லூரியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

 

வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி கல்லூரியில் சேர்ந்த பின்பு பிளேஸ்மெண்ட் எதுவும் வரவில்லை என்றால் உடனடியாக நாம் கன்ஸ்யூமர் கோட்டில் அல்லது https:// consumerhelpline.gov.in/ என்ற இணையதள பக்கத்தின் ஆன்லைன் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.