ஐந்து நிமிடம் போதும் மொறு மொறு தீபாவளி பலகாரம்! உடனே ட்ரை பண்ணுங்க!

0
97

ஐந்து நிமிடம் போதும் மொறு மொறு தீபாவளி பலகாரம்! உடனே ட்ரை பண்ணுங்க!

தீபாவளி பண்டிகையை நாளில் புத்தாடை அணிந்து பலகாரங்கள் சாப்பிட்டு கொண்டாடுவது தான் வழக்கம். இதிலும் கடையில் வாங்கிய இனிப்புகளை சுவைப்பதை விட நாமாகவே நமது கைகளில் பார்த்து பார்த்து செய்யும் உணவிற்கு ருசி அதிகம். பலர் பலகாரங்கள் என்றாலே அது பெரிய வேலை அதை எப்படி செய்வது என்று எண்ணி செய்யாமல் விட்டு விடுகின்றனர். அவர்கள் இனி கவலைப்பட தேவையில்லை. இந்த ரெசிபி வெறும் ஐந்து நிமிடத்திலேயே செய்து முடித்து விடலாம்.

ரிப்பன் பக்கோடா

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு ஒரு கப்

கடலை மாவு கால் கப்

பொட்டுக்கடலை மாவு கால் கப்

மிளகாய் தூள் அரை ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

பெருங்காயம் கால் ஸ்பூன்

செய்முறை:

அரிசி மாவு கடலை மாவு பொட்டுக்கடலை மாவு மிளகாய்த்தூள் உப்பு பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றாக கலக்க வேண்டும். அரை குழி கரண்டி அளவிற்கு வெதுவெதுப்பான எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் ஊற்றிய பிறகு மாவை நன்றாக கலக்க வேண்டும். பிறகு தண்ணீர் ஊற்றி பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு மாவை அச்சில் போட்டு பிழிந்து எடுத்தால் ரிப்பன் பக்கோடா ரெடி.