மதிப்புமிக்க அணிகளின் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய மும்பை அணி! சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

0
128

ஐபிஎல் என்று வந்துவிட்டாலே கிரிக்கெட் ரசிகர்களிடையே புது உற்சாகம் பிறக்கும். அதிலும் அந்தந்த மாநிலத்திற்கும் ஒவ்வொரு அணி இருப்பதால் ரசிகர்களிடையே போட்டி அதிகமாக காணப்படும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பல்வேறு மாநிலங்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் அணி இருந்தாலும், மும்பை அணியும், சென்னை அணியும், இதில் தனித்துவம் பெற்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

எண்ணற்ற ஐபிஎல் அணிகள் இருந்தாலும் இந்த இரு அணிகளுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இன்னமும் சொல்ல வேண்டுமென்றால் இந்த இரு அணி ரசிகர்களும் நீயா? நானா? என்று விறுவிறுப்புடன் போட்டி போடுவார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆகவே இந்த இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல ரசிகர்கள் பட்டாளம் கூட சற்றேறக்குறைய இரண்டிற்கும் சமமாகவே இருக்கும் என்ற அளவிற்கு இந்த இரு அணிகளுக்கிடையிலான ரசிகர்கள் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஐபிஎல் 15-ஆவது சீசன் கடந்த மாதம் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சீசனில் சென்னை மும்பை அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களில் இருக்கின்றன.

குறிப்பாக மும்பை அணி விளையாடிய 8 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில், ஐபிஎல் அணிகளின் விலை மதிப்பு பற்றி போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

அதன் விவரம் வருமாறு, மும்பை இந்தியன்ஸ் அணி 9,962 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், சென்னை அணி 8,811 கோடி ரூபாயுடன் 2வது இடத்திலும், இருக்கின்றன. கல்கத்தா அணி 8,428 கோடி ரூபாயுடன் 3வது இடத்திலும், லக்னோ அணி 8,236 கோடி ரூபாயுடன் 4வது இடத்திலும், இருக்கின்றன.

டெல்லி அணி 7, 930 கோடி ரூபாயுடன் 5வது இடத்திலும், பெங்களூரு அணி 7, 853 கோடி ரூபாயுடன் 6வது இடத்திலும், இருக்கின்றன.

அதேபோல ராஜஸ்தான் அணி 7,662 கோடி ரூபாயுடன் 7வது இடத்திலும், ஹைதராபாத் அணி 7,432 கோடி ரூபாயுடன் 8-வது இடத்திலும், இருக்கின்றன.

அதேபோல பஞ்சாப் அணி 7,087 கோடி ரூபாயுடன் 9வது இடத்திலும், குஜராத் அணி 6,512 கோடி ரூபாயுடன் 10வது இடத்திலும், இருக்கின்றன